கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி: ஐகோர்ட்டில் பொது நல மனு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை--விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை அறிவிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திருப்பூரை சேர்ந்த, ஹிந்து முன்னேற்ற கழக தலைவர் கே.கோபிநாத் தாக்கல் செய்த மனு:ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. செப்டம்பர், 10ம் தேதி, விநாயகர்

சென்னை--விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை அறிவிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரை சேர்ந்த, ஹிந்து முன்னேற்ற கழக தலைவர் கே.கோபிநாத் தாக்கல் செய்த மனு:ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. செப்டம்பர், 10ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. சாலைகளில் சிலைகள் வைத்து வழிபட, மக்கள் தயாராகி வருகின்றனர்.விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் காரணமாக, கொரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரி, ஆக., 2ம் தேதி, தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.,க்கும் மனு கொடுத்தேன்; இதுவரை, எந்த அறிவிப்பும் வரவில்லை.எனவே, விநாயகர் சதுர்த்திக்கான விதிகளை வகுக்க, அரசுக்கும், டி.ஜி.பி.,க்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X