மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, வீடு ஒன்றில் பதுக்கப்பட்ட போதை பொருளான 60 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்து, 11 பேரை கைது செய்தனர்.
மதுராந்தகம் ஒன்றியம், படாளம் அடுத்த பழையனுாரில் வீடு எடுத்து, சந்தேகத்திற்கு உரிய ஒரு கும்பல், கஞ்சா விற்பதாக படாளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், அந்த வீட்டில் தங்கியிருந்த 11 பேரை பிடித்தனர். வீட்டை சோதனையிட்டதில் அங்கு பதுக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சா, ஒரு கார், ஒரு மினி சரக்கு வேன் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் போன்றவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களான சங்கர், 24, ராமுடு, 28, கார்த்திக், 28, பவுன்குமார், 23, சதீஷ்குமார், 32, பூமிநாதன், 24, விஜயகுமார், 29, சுபாஷ், 25, சங்கர், 25 சையத் முகமது,30, இப்ராஹிம், 33, ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள், பல குற்றங்களில் கூட்டாக ஈடுபடுவதுடன், தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இந்த 11 பேரையும் கைது செய்த போலீசார், எங்கிருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வருகின்றனர், ஏஜன்ட் யார் என, போதை தடுப்பு பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE