கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலி சான்றிதழ் வாயிலாக பணி நியமனம் அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்ய உத்தரவு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை-போலி சான்றிதழ் வழங்கியவர்களை, பணி நியமனம் செய்த அதிகாரிகளை, 'டிஸ்மிஸ்' செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் போக்கு வரத்து கழகத்தில், பஸ் டிரைவராக சீனிவாசன் என்பவர் 1994ல் நியமிக்கப்பட்டார்.குற்றச்சாட்டு மெமோகல்வி சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வுக்கு பின், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டு, 2000ம் ஆண்டில் பணி வரன்முறை

சென்னை-போலி சான்றிதழ் வழங்கியவர்களை, பணி நியமனம் செய்த அதிகாரிகளை, 'டிஸ்மிஸ்' செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் போக்கு வரத்து கழகத்தில், பஸ் டிரைவராக சீனிவாசன் என்பவர் 1994ல் நியமிக்கப்பட்டார்.குற்றச்சாட்டு மெமோகல்வி சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வுக்கு பின், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டு, 2000ம் ஆண்டில் பணி வரன்முறை செய்யப்பட்டது.போலி சான்றிதழ் வழங்கியதாக, 2001ல், சீனிவாசனுக்கு குற்றச்சாட்டு மெமோ வழங்கப்பட்டு, விசாரணை நடந்தது. விசாரணை அதிகாரி அளித்த அறிக்கை அடிப்படையில், சீனிவாசனை பணி நீக்கம் செய்து, போக்கு வரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டது.அதை எதிர்த்து, வேலுார் தொழிலாளர் நீதிமன்றத்தில் சீனிவாசன் முறையிட்டார்.

பள்ளி தலைமை ஆசிரியை அளித்த ஆதாரத்தின் அடிப்படையில், போலி சான்றிதழ் அளிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டதாக கூறி, பணி நீக்கம் செய்தது சரியே என, தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன் மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பள்ளியில், சீனிவாசன் படிக்கவில்லை என, யாரும் வாக்குமூலம் அளிக்கவில்லை. சான்றிதழின் வரிசை எண், வேறு மாணவர்களுக்கானது என்றே வாக்குமூலம் தரப்பட்டுள்ளது.'மனுதாரரை போன்ற சிலருக்கு, குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் என்பது பாரபட்சமானது' என்றார்.போக்குவரத்து கழகம் சார்பில், வழக்கறிஞர் சி.எஸ்.கே.சதீஷ் ஆஜராகி, ''தொழிலாளர் நீதிமன்றம், ஆதாரங்களை பரிசீலித்து, மனுதாரர் அளித்த சான்றிதழ் சரியானது அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளது,'' என்றார்.மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:தற்காலிக பணியாளருக்கு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்படவில்லை; போலி சான்றிதழ் அளித்ததாக கூறப்படும் மூன்று ஊழியர்களை, குறைந்தபட்ச தண்டனையுடன் விட்டு விட்டதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.எந்த சூழ்நிலையில் மற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர் என்பதை, இந்த நீதிமன்றம் ஆராய விரும்பவில்லை.போலி சான்றிதழ் அளித்து விட்டால், பாரபட்சம் காட்டுவதாக ஒரு நிலையை ஊழியர் எடுக்க முடியாது. மோசடி, போலி சான்றிதழ் வாயிலாக பணி நியமனம் பெற்றால், அந்த ஊழியர் நிவாரணம் பெற உரிமையில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மனுதாரர் சமர்ப்பித்த சான்றிதழ் போலியானது என்பதை, ஆவணம் மற்றும் வாய்மொழி சாட்சியங்கள் வாயிலாக, தொழிலாளர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மனுதாரரை போன்றவர்களை, பணி நியமனம் செய்த நிர்வாகத்தின் செயலையும் ஏற்க முடியாது.ஒழுங்கு நடவடிக்கைபோலி சான்றிதழ் அடிப்படையில், மனுதாரரை போன்றவர்களை நியமித்த அதிகாரிகளை, சுதந்திரமாக விட்டு விட முடியாது.அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நேர்மையின்மை, கடமையில் அர்ப்பணிப்பு இல்லாமைக்காக, அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.பொறுப்பற்ற அதிகாரிகளை, பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்யும் முன், முக்கியத்துவம் இல்லாத பணிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.பணி பதிவேட்டில், பொறுப்பற்ற தன்மையை பதிவு செய்ய வேண்டும். நேர்மை தவறிய அதிகாரிகள், பணப்பலன்கள் பெறவும் அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X