சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலாவதி விசாவில் தங்கியவரை சூடானுக்கு அனுப்பிய அதிகாரிகள்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை--தமிழகத்தில், காலாFவதியான விசாவில் தங்கியிருந்த சூடான் நாட்டைச் சேர்ந்த நபரை, குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று சூடானுக்கு திருப்பி அனுப்பினர்.கூலி வேலைசூடான் நாட்டைச் சேர்ந்தவர் முகமது ஹலுாம், 36. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார். விசா காலம் முடிந்தும் அவர் நாடு திரும்பவில்லை.

சென்னை--தமிழகத்தில், காலாFவதியான விசாவில் தங்கியிருந்த சூடான் நாட்டைச் சேர்ந்த நபரை, குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று சூடானுக்கு திருப்பி அனுப்பினர்.

கூலி வேலைசூடான் நாட்டைச் சேர்ந்தவர் முகமது ஹலுாம், 36. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார். விசா காலம் முடிந்தும் அவர் நாடு திரும்பவில்லை. தமிழகத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தங்கி, பின்னலாடை தொழிற்சாலைகளில் தினக் கூலியாக வேலை செய்து வந்துஉள்ளார்.இதற்கிடையே, சூடானில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த முகமது ஹலுாம், திரும்பி செல்லாததையும், அவரது விசா நீட்டிப்பு செய்யப்படாததையும் கண்டுபிடித்த குடியுரிமை அதிகாரிகள், அவரைத் தேடத் துவங்கினர். தமிழக போலீசிற்கும் தகவல் அளித்து, முகமது ஹலுாமை தேடினர்.சிறப்பு முகாம்திருப்பூர் அருகே முகமது ஹலுாமை கடந்த மாதம் போலீசார் கண்டுபிடித்தனர்.

பின், திருச்சியில் உள்ள ஒரு சிறப்பு முகாமில் அவரைத் தங்க வைத்தனர்.திருச்சி சிறப்பு முகாமில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்திற்கு, முகமது ஹலுாம் அழைத்து வரப்பட்டார். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, சென்னையில் இருந்து தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில், தோகா வழியாக சூடான் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.எதிர்காலத்தில் முகமது ஹலுாம், இந்தியாவிற்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்; அவருக்கு மத்திய அரசு இனி விசா வழங்காது என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X