பொது செய்தி

தமிழ்நாடு

சான்றிதழ் சரிபார்ப்புக்கு கூடுதல் அவகாசம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை-இன்ஜினியரிங் சேர்க்கைக்கு விண்ணப்பித்த விளையாட்டு பிரிவினருக்கு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை, 26ல் துவங்கி, இம்மாதம், 24ல்

சென்னை-இன்ஜினியரிங் சேர்க்கைக்கு விண்ணப்பித்த விளையாட்டு பிரிவினருக்கு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை, 26ல் துவங்கி, இம்மாதம், 24ல் முடிந்தது. நேற்று முன்தினத்துடன் விண்ணப்ப கட்டணம் செலுத்தும் அவகாசம் முடிந்தது.

இந்நிலையில், விளையாட்டு பிரிவில் ஒதுக்கீடு கோரும் மாணவர்களுக்கு, ஒரு வாரமாக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நிறைவடைந்தது. இதில், பங்கேற்காத மாணவர்கள் இருந்தால், அவர்கள் வரும், 1, 2ம் தேதிகளில், சென்னை தரமணியில், மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள இன்ஜினியரிங் கவுன்சிலிங் உதவி மையத்துக்கு, அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X