பொது செய்தி

தமிழ்நாடு

1,000 பொறியாளர்களை தேர்வு செய்ய கோரிக்கை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை-பணிச்சுமையை குறைக்க, 1,000 உதவி பொறியாளர்களை தேர்வு செய்யும்படி, மின் வாரியத்துக்கு, பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மின் வாரியத்தில், மின் உற்பத்தி, மின் வினியோகம் உள்ளிட்ட பணிகளின் முதுகெலும்பாக பொறியாளர்கள் திகழ்கின்றனர். எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் ஆகிய பிரிவுகளில், 600 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, 2020ல் அறிவிப்பு

சென்னை-பணிச்சுமையை குறைக்க, 1,000 உதவி பொறியாளர்களை தேர்வு செய்யும்படி, மின் வாரியத்துக்கு, பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மின் வாரியத்தில், மின் உற்பத்தி, மின் வினியோகம் உள்ளிட்ட பணிகளின் முதுகெலும்பாக பொறியாளர்கள் திகழ்கின்றனர். எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் ஆகிய பிரிவுகளில், 600 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, 2020ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதற்கு, 1 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளனர். இதுவரை, தேர்வு நடத்தப்படவில்லை.

ஆட்சி மாற்றத்தால், புதிய அறிவிப்பு வெளியிட்டு, ஆட்களை தேர்வு செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.தற்போது, காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனால், உதவி பொறியாளர் பதவியில், 1,000 நபர்களை விரைந்து தேர்வு செய்யுமாறு, மின் வாரியத்திற்கு, பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X