அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருவேல மரங்கள் அகற்றப்படும்; அமைச்சர் துரைமுருகன் உறுதி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
காங்கிரஸ் - ராம கருமாணிக்கம்: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி, ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயில் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் துரைமுருகன்: ராம கருமாணிக்கம் பேசியபோது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், இவரதுதாத்தா, சட்டசபையில் என்இருக்கைக்கு அருகில் அமர்ந்து இருப்பார். அதன்பின், அவர் தந்தை ராமசாமி; அடுத்து இவர். மூன்றாவது

காங்கிரஸ் - ராம கருமாணிக்கம்: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி, ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயில் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: ராம கருமாணிக்கம் பேசியபோது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், இவரதுதாத்தா, சட்டசபையில் என்இருக்கைக்கு அருகில் அமர்ந்து இருப்பார். அதன்பின், அவர் தந்தை ராமசாமி; அடுத்து இவர். மூன்றாவது தலைமுறை எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறினார். பசுமைக் காடு அமைக்க வேண்டும் என்பதற்காக, ஏரிகளில் கருவேல மரங்களை நட்டனர். அப்போதே, நான் எதிர்த்தேன். இப்போது, அதன் விளைவு என்னவென்றால், கருவேல மரத்தில் ஊறி வரும் தண்ணீரை பாய்ச்சினால், பயிர்கள் சாவியாகி விடுகின்றன.அதன் முள், விவசாயிகளின் கால்களில் ஏறிக் கொள்கிறது. முன்பெல்லாம், ஏரியில் குளித்தேன்; துணி துவைத்தேன் என்பர். இப்போது, எந்த ஏரியிலும் கால் வைக்க முடியாத அளவிற்கு கெட்டு போய் விட்டது. எனவே, கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதில் திடமாக இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை அகற்றி ஆக வேண்டும். அதை ஒரு திட்டமாக செய்ய கருதி உள்ளேன். ஊராட்சி நிர்வாகம் சார்பில், அந்த மரங்களை வெட்டி, அதன் வருவாயை எடுத்துக் கொண்டு, இடத்தை காலி செய்து கொடுத்தால் போதும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X