சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பொறுத்தது போதும்!

Updated : செப் 01, 2021 | Added : ஆக 29, 2021
Share
Advertisement
'இரண்டில் ஒன்று பார்த்து விடுவது' என்ற முடிவுடன் இருக்கிறார், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்.எதிர்ப்பாளர்கள் யாரும் இன்றி, பஞ்சாப் காங்கிரசில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி, தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தவர் அமரீந்தர் சிங்.ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரசில் காலடி எடுத்து வைத்தபின், அவரது நிம்மதியே போய்
அக்கம் பக்கம்

'இரண்டில் ஒன்று பார்த்து விடுவது' என்ற முடிவுடன் இருக்கிறார், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்.எதிர்ப்பாளர்கள் யாரும் இன்றி, பஞ்சாப் காங்கிரசில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி, தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தவர் அமரீந்தர் சிங்.ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரசில் காலடி எடுத்து வைத்தபின், அவரது நிம்மதியே போய் விட்டது.

பொழுது விடிந்ததுமே, 'முதல்வருக்கு இன்று எந்த மாதிரியான விஷயத்தில் நெருக்கடி கொடுக்கலாம்' என்ற நினைப்போடு தான் கண் விழிக்கிறார் சித்து. இதனால் அவரை காங்கிரஸ் மாநில தலைவராக நியமித்து, பஞ்சாயத்தை முடித்து வைத்தது கட்சி மேலிடம். ஆனாலும் சித்துவின் சேட்டைகள் குறையவில்லை.மறைமுகமாகவும், நேரடியாகவும் அமரீந்தரை வம்பிழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதனால் இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு அமரீந்தர் வந்து விட்டார். கட்சியில் தனக்கு விசுவாசமாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார். இவர்கள் வாயிலாக, 'சித்துவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்' என, காங்., மேலிடத்துக்கு நெருக்கடி கொடுப்பது என முடிவு செய்துள்ளார்.
இதற்கு மேலிடம் சம்மதம் தெரிவிக்கவில்லையெனில், தேர்தல் நேரத்தில் தனிக்கட்சி துவங்குவது என்ற அதிரடி முடிவையும் எடுக்க தயாராகி வருகிறார். அமரீந்தரின் இந்த நடவடிக்கையால் காங்., மேலிடம் கலக்கம் அடைந்துள்ளது.


நன்றி கெட்ட உலகம்!


'இதெல்லாம் நியாயமே இல்லை தெரியுமா; பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கமா...' என, கண்ணீர் சிந்துகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.

நாட்டிலேயே முதல் முதலாக கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால் தொடர் நடவடிக்கைகளால் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி கேரள மாநில அரசு அனைவரது பாராட்டையும் பெற்றது.

அப்போது பினராயி விஜயனை விட, மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ைஷலஜா டீச்சருக்குத் தான் பாராட்டுக்கள் குவிந்தன. இந்த எரிச்சலில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தபின், அமைச்சரவையிலிருந்து ஷைலஜாவை 'கழற்றி' விட்டார் விஜயன். வீணா ஜார்ஜ் என்ற பத்திரிகையாளரை அமைச்சராக்கினார். தற்போது கொரோனா இரண்டாவது அலை மற்ற மாநிலங்களில் குறைந்தாலும், கேரளாவில் மட்டும் சுற்றிச் சுற்றி அடிக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க முடியாமல் கேரள அரசு விழி பிதுங்கியுள்ளது.எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.,வைச் சேர்ந்த தலைவர்கள், 'பினராயி விஜயன் நிர்வாகம் சரியில்லை' என, அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர். இப்போது சுகாதார அமைச்சராக உள்ள வீணாவைப் பற்றிய பேச்சே இல்லை.

இதனால் விரக்தி அடைந்துள்ள பினராயி விஜயன், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்தியபோது சுகாதார அமைச்சருக்கு பாராட்டு பத்திரம் வாசித்தனர். கட்டுப்படுத்த முடியாதபோது முதல்வரை குறை சொல்கின்றனர். நன்றி கெட்ட உலகம்...' என புலம்புகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X