சென்னை-காதலித்து மணந்த நாக சைதன்யாவை, நடிகை சமந்தா பிரிய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா.
நடிகர் நாக சைதன்யாவை காதலித்த சமந்தா, 2017ல், அவரை திருமணம் செய்தார். 'திருமணத்திற்கு பின்னும் நடிப்பேன்' என்ற நிபந்தனையை முன்வைத்தே, திருமணத்திற்கு சமந்தா சம்மதித்தார். இதையடுத்து, தன் பெயருடன், 'அக்கினேனி' கணவரின் குடும்ப பெயரையும் சேர்த்து கொண்டார். தொடர்ந்து படங்களில் நடித்த வந்த சமந்தா, சவாலான வேடங்களில் மட்டுமின்றி, சர்ச்சையான பாத்திரங்களிலும் நடித்தார். சமீபத்தில், அவர் நடித்த, 'தி பேமிலி மேன் 2' எனும், 'வெப் சீரிஸ்' தடை செய்யப்பட வேண்டும் என்ற அளவுக்கு பிரச்னையானது. இதுகுறித்து, சமந்தாவும் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில், சமந்தா அக்கினேனி என்ற தன் பெயரை, 'எஸ்' என, சுருக்கி கொண்டுள்ளார். சினிமாவுக்கு சில காலம் ஓய்வு கொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இதனால், சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.மேலும், மனைவிக்கு ஜீவனாம்சமாக, கோவாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீட்டை, நாக சைதன்யா வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்விகளுக்கு, வெளிப்படையாக, எந்த பதிலையும் அளிக்க மறுத்து விட்டார், சமந்தா.
அதே நேரத்தில், பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது:எந்த ஒரு விஷயமானாலும், நான் விரும்பும் போது மட்டுமே பேச நினைப்பேன். மக்கள் கேட்பதற்காக, நான் பேசமாட்டேன். இதுபோன்ற விஷயங்களுக்கு எதிர்வினையாற்றவோ, மோதலையோ நான் விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான சொந்த கருத்தில், எந்தளவு உரிமை உள்ளதோ, அதேபோல், என் கருத்துக்கும், எனக்கு உரிமை உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement