பெண்ணே பேராற்றல் நுால் வெளியீட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண்ணே பேராற்றல் நுால் வெளியீட்டு விழா

Added : ஆக 29, 2021
Share
மதுரை : மதுரையில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம், மண், மக்கள், மனிதம் வெளியீடு இணைந்து சர்வதேச பெண்கள் சமத்துவநாள் விழா, பத்திரிகையாளர் ப.திருமலை எழுதிய 'பெண்ணே பேராற்றல்' நுால் வெளியீட்டு விழாவை நடத்தியது.அறக்கட்டளை செயல் இயக்குனர் ராஜ்குமாரி நுால் வெளியிட முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி பெற்று கொண்டார். 'பெண்ணே பேராற்றல்' நுாலை பள்ளி,

மதுரை : மதுரையில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம், மண், மக்கள், மனிதம் வெளியீடு இணைந்து சர்வதேச பெண்கள் சமத்துவநாள் விழா, பத்திரிகையாளர் ப.திருமலை எழுதிய 'பெண்ணே பேராற்றல்' நுால் வெளியீட்டு விழாவை நடத்தியது.அறக்கட்டளை செயல் இயக்குனர் ராஜ்குமாரி நுால் வெளியிட முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி பெற்று கொண்டார். 'பெண்ணே பேராற்றல்' நுாலை பள்ளி, கல்லுாரிகளில் பாடமாக்க அரசு முன்வர வேண்டும் என பாலபாரதி வலியுறுத்தினார்.அறக்கட்டளை திட்ட இயக்குனர் ஜனார்தன் பாபு வரவேற்றார். நீதியரசர் வி.சிவராஜ் பாட்டீல் பவுண்டேஷன் தலைவர் வழக்கறிஞர் செல்வகோமதி தலைமை வகித்தார்.ஏக்தா இயக்குனர் பிம்லா சந்திரசேகர், பத்திரிகையாளர் பத்மினி, சிறார் நீதிக்குழும உறுப்பினர் வழக்கறிஞர் பாலசுந்தரி வாழ்த்துரை வழங்கினர். நுாலாசிரியர் திருமலை ஏற்புரை நிகழ்த்த பதிப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X