அரசியல் செய்தி

தமிழ்நாடு

விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
''அ.தி.மு.க., ஆட்சியில் பால் வளத்துறை மூழ்கிய கப்பலாக இருந்தது. அதை நீர்மூழ்கி கப்பலாக மாற்றி, பயணித்து வருகிறோம்,'' என, பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.அவரது பதிலுரை:தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, பால் விலையை லிட்டருக்கு, ௩ ரூபாய் குறைத்து, முதல்வர் உத்தரவிட்டார். ஆவின் பால் விற்பனை, ஒரு லட்சத்து, 74 லிட்டர் அதிகரித்துள்ளது. ஒரு கோடி நுகர்வோரின்

''அ.தி.மு.க., ஆட்சியில் பால் வளத்துறை மூழ்கிய கப்பலாக இருந்தது. அதை நீர்மூழ்கி கப்பலாக மாற்றி, பயணித்து வருகிறோம்,'' என, பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.

அவரது பதிலுரை:தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, பால் விலையை லிட்டருக்கு, ௩ ரூபாய் குறைத்து, முதல்வர் உத்தரவிட்டார். ஆவின் பால் விற்பனை, ஒரு லட்சத்து, 74 லிட்டர் அதிகரித்துள்ளது. ஒரு கோடி நுகர்வோரின் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு, 270 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயம் பொய்த்து போனாலும், கிராமப்புற பொருளாதாரத்தில் பால் தொழில், விவசாயிகளுக்கு வாழ்வாரத்தில் உறுதி அளிக்கிறது.

நாள்தோறும், 41 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு, 4.25 லட்சம் உற்பத்தியாளர்கள் குடும்பங்களில், 12 கோடி ரூபாய் அளவிற்கு பணப்புழக்கம் ஏற்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும், பால் தொழிலை தவிர, வேறு எந்த வேளாண் தொழிலும், இந்த அளவிற்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்தவில்லை. பால் உற்பத்தியாளர்களின், கால்நடைகளுக்கு கலப்பு தீவனம், பசுந்தீவனம், தாது உப்பு கலவை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இதன் வாயிலாக, 16 லட்சத்து, 45 ஆயிரம் பசுக்கள், 45 ஆயிரம் எருமை மாடுகள் பயன் பெறுகின்றன. ஆவின் வாயிலாக சென்னையில், 13 லட்சத்து, 59 ஆயிரம் லிட்டர் பால் தற்போது விற்கப்படுகிறது; 15 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டங்களில், 13 லட்சத்து, 55 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. பால் உற்பத்தி குறையும் காலங்களில், இருப்பில் உள்ள பால் பவுடர் மற்றும் வெண்ணெய் பயன்படுத்தி, பால் உருவாக்கம் செய்து, தட்டுப்பாடு தவிர்க்கப்படுகிறது.

நுகர்வோர்களை கவரும் வகையில், வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட, 90 நாட்கள் கெடாத, 'அல்ட்ரா' பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்படும். ஆவின் நிறுவனம் வாயிலாக, சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார், துபாய் போன்ற நாடுகளுக்கு, மீண்டும் பால் பொருட்கள் ஏற்றுமதி துவங்கியுள்ளது. அண்டை மாநிலங்களுடன், விற்பனை தடைப்பட்ட நிலையில், அதற்கும் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் பால் வளத்துறை, ஆவின் நிறுவனம் மூழ்கிய கப்பலாக இருந்தது. அதை, நீர்மூழ்கி கப்பலாக மாற்றி, பயணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X