தமிழ்நாடு

அங்கன்வாடியில் தரமான உணவு வழங்க உத்தரவு 

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி சார்பில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் கார்த்திகேயன் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தரமான உணவுகளை வழங்க உத்தரவிட்டார். சுந்தரராஜபுரம் ஆரம்ப, மேல்நிலைப்பள்ளியில் ரூ.17.70 லட்சத்தில் மராமத்து பணிகள், மீனாட்சி அவென்யூவில்ரூ.5.80 லட்சத்தில் குழாய், பாதாள சாக்கடை பணிகள், சேதுபதி தெருவில் ரூ.13.20, ஜெய்ஹிந்த்புரம் 60 அடி
 அங்கன்வாடியில் தரமான உணவு வழங்க உத்தரவு 

மதுரை : மதுரை மாநகராட்சி சார்பில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் கார்த்திகேயன் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தரமான உணவுகளை வழங்க உத்தரவிட்டார். சுந்தரராஜபுரம் ஆரம்ப, மேல்நிலைப்பள்ளியில் ரூ.17.70 லட்சத்தில் மராமத்து பணிகள், மீனாட்சி அவென்யூவில்ரூ.5.80 லட்சத்தில் குழாய், பாதாள சாக்கடை பணிகள், சேதுபதி தெருவில் ரூ.13.20, ஜெய்ஹிந்த்புரம் 60 அடி ரோட்டில் ரூ.15 லட்சத்தில்அமைத்த பேவர் பிளாக் ரோடுகள், கோவலன் நகர் சத்துணவு கூடத்தில்ரூ.1.20 லட்சத்திலான பணி, பாம்பன் நகரில்ரூ.6.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் உள்ளிட்ட ரூ.67.55 லட்சத்திலான பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார். உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர்கள் ஆறுமுகம், குழந்தைவேலு, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X