பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பழவேற்காடு : ''திருவள்ளூர் மாவட்டத்தில், 12 ஆயிரம் ஆசிரியர்களில், 8,500 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர்,'' என, கலெக்டர் தெரிவித்தார்.பழவேற்காடு முகத்துவாரத்தில் தற்காலிக துார்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. அதை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார்.பின் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:பழவேற்காடில்
திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு

பழவேற்காடு : ''திருவள்ளூர் மாவட்டத்தில், 12 ஆயிரம் ஆசிரியர்களில், 8,500 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர்,'' என, கலெக்டர் தெரிவித்தார்.

பழவேற்காடு முகத்துவாரத்தில் தற்காலிக துார்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. அதை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார்.பின் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:பழவேற்காடில் நிரந்தர முகத்துவாரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, படகுகள் சிரமம் இன்றி செல்வதற்காக, தற்காலிக துார்வாரும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்தோம்.பழவேற்காடு சுற்றுலாத் தளத்தை மேம்படுத்துவதற்காக விரிவான ஆய்வறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், அந்தந்த பகுதி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.திருவள்ளூர் மாவட்டம் முழுதும் உள்ள, 12 ஆயிரம்ஆசிரியர்களில், 8,500 பேர் முதல் முறையும், 6,500 பேர் இரண்டு முறையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.விடுபட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அனைத்து ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X