அரசியல் செய்தி

தமிழ்நாடு

பனையில் இருந்து புது பானம் பா.ஜ., - எம்.எல்.ஏ., யோசனை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: பருவமழை குறைவதால், பாசனத்திற்கான நீர் கிடைப்பது பாதிக்கிறது. திருநெல்வேலி தொகுதியில், 43 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள மானுார், பள்ளமடை குளங்கள் எட்டு ஆண்டுகளாக நிரம்பவில்லை. முன்பெல்லாம் குற்றாலத்தில் சீசன் வந்தால், இவை நிரம்பும். ஆக்கிரமிப்புகளால், நீர்வரத்து கால்வாய் குறுகிவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏற்கனவே, 2011ல் நாங்கள், 23

பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: பருவமழை குறைவதால், பாசனத்திற்கான நீர் கிடைப்பது பாதிக்கிறது. திருநெல்வேலி தொகுதியில், 43 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள மானுார், பள்ளமடை குளங்கள் எட்டு ஆண்டுகளாக நிரம்பவில்லை. முன்பெல்லாம் குற்றாலத்தில் சீசன் வந்தால், இவை நிரம்பும். ஆக்கிரமிப்புகளால், நீர்வரத்து கால்வாய் குறுகிவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஏற்கனவே, 2011ல் நாங்கள், 23 கி.மீ.,க்கு துார் வாரினோம்; 5 கி.மீ., துார் வார வேண்டும்.நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: மானுார் குளம், ஆற்றில் இருந்து மேல் பகுதியில் உள்ளது. அதனால், அந்த குளத்திற்கு நீர் வரத்து குறைகிறது. தி.மு.க., ஆட்சியில், ஏற்கனவே அந்த குளத்தை நிரப்பி காட்டினோம்; மீண்டும் நிரப்பி காட்டுவோம்.

நயினார் நாகேந்திரன்: பனை மரத்தில் இருந்து பாலையை சீவி, புது கலையம் கட்டி, அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டு, சீரகத்துாள் போட்டு கட்டி, 24 மணிநேரம் கழித்து இறக்க வேண்டும். தினமும் மாலையில், 200 மில்லி முதல், 250 மில்லி வரை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. அது கொஞ்சம் 'சுள்'ௌன்று இருக்கும். மதுவகைகள் சாப்பிட்டால், கல்லீரல் பாதிக்கும். ஆனால், இதை குடித்தால் கல்லீரல் பலப்படும். நான் சொல்வது சரி என்று நினைக்கிறேன்.துரைமுருகன்: நல்ல சித்த வைத்தியம், அடுத்த முறை திருநெல்வேலி வரும் போது, வெங்காயம் போட்டு, பார்த்து விடுவோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X