பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: தென்மேற்கு பருவமழை மட்டுமின்றி, வடகிழக்கு பருவ மழையிலும், கன்னியாகுமரிக்கு அதிக நீர் கிடைக்கிறது. இங்கிருந்து, 30 டி.எம்.சி., நீர், மணக்குடி அருகே கடலில் கலக்கிறது. வீணாகும் தண்ணீரை, திருநெல்வேலி மாவட்டத்திற்கு வழங்க வேண்டும்.
நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: ராதாபுரத்திற்கு தண்ணீர் தருவதற்கு, கன்னியாகுமரி மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். தண்ணீர் கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதற்கான கால்வாயை, 10 ஆண்டுகளாக துார் வாரவில்லை. அந்த பணிகளை செய்து, கன்னியாகுமரி மக்களை சமாதானம் செய்து, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., - தளவாய் சுந்தரம்: நீர் வளத்துறை அமைச்சர் சரியான விளக்கம் கொடுத்துள்ளார். இது, இரண்டு மாவட்டத்திற்குரிய பிரச்னை. கால்வாயை துார் வாரிவிட்டு, தண்ணீர் கூடுதலாக இருந்தால் கொடுக்கலாம்.நயினார் நாகேந்திரன்: கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தான் கேட்கிறோம். எனக்கும் கன்னியாகுமரியில் பாசனம் இருக்கிறது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அமைச்சர் மனோ தங்கராஜ்: உபரி நீரை கொடுப்பதில் பிரச்னை இல்லை. பேச்சிப்பாறை கால்வாய் பழைய நிலையில் இல்லை. இதனால், தண்ணீர் வருவதில் பிரச்னை இருக்கிறது. இந்த பிரச்னையை தீர்க்க, தொழில்நுட்ப குழு அமைக்க வேண்டும்.சபாநாயகர் அப்பாவு: பேச்சிப்பாறை அணை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டியது. அதற்கு, 18 கோடி ரூபாய் நிதி தந்து, தோவாளை கால்வாய் செப்பனிட்டு தந்தவர், கருணாநிதி. அதில், 450 கன அடி தண்ணீர் எடுக்கப்பட்டு, 150 கன அடி தண்ணீர் தான் ராதாபுரத்திற்கு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE