அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா!

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை-''தமிழகத்தில், பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.சட்டசபையில், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், 20வது கால்நடை கணக்கின்படி, 2.46 கோடி கால்நடைகள்; 12.70 கோடி

சென்னை-''தமிழகத்தில், பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சட்டசபையில், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், 20வது கால்நடை கணக்கின்படி, 2.46 கோடி கால்நடைகள்; 12.70 கோடி கோழிகள் விவசாயிகளால் வளர்க்கப்படுகின்றன. கோழிப்பண்ணை தொழில் வணிக ரீதியாக, சிறப்பாக செயல்படுகிறது.கறவை மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, வெண்பன்றி வளர்ப்பு தொழிலை, வணிக ரீதியாக மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பசுந்தீவனம் உற்பத்தியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை மருத்துவமனைகளில், உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். தமிழக மீனவர்கள் பாக் வளைகுடா பகுதியில், மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, அரசு உறுதி பூண்டுள்ளது. பேரிடர் காலங்களில், மீனவர்களை பாதுகாக்க, தடையற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்கப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்பு அரசால் ஊக்கப்படுத்தப்படும்.

கடலோர மாவட்டங்களில், கடல்பாசி உற்பத்தியை அதிகரிக்க, பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்கு தளங்களை சர்வதேச தரத்தில் உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்கும். புதிய தொழில்நுட்பங்கள் வழியே, மீன் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும்.

அனைத்து நீர் நிலைகளிலும், மீன் குஞ்சுகளை இருப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்குவதில், அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X