பொது செய்தி

இந்தியா

போலீஸ் செய்திகள்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'பைக்' திருடனை கைது செய்த போலீசார், குழந்தை கடத்தலை கண்டுப்பிடித்தனர். கடத்தப்பட்ட ஓராண்டுக்கு பின், குழந்தை தாயிடம் சேர்ந்தது. பெங்களூரின் ஜெ.ஜெ.நகரில் வசிப்பவர் ஆயாஜ் பாஷா. இவரது மனைவி அரபிந்த் தாஜ். இத்தம்பதியருக்கு, இரண்டு மகன்கள் இருந்தனர்.இரண்டு வயது மகன் மூத்த மகன் நோய்க்கு ஆளாகி உயிரிழந்தார். 2020 நவம்பர் 11ல், இத்தம்பதியரின் இரண்டு வயது மகன், வீட்டு

பெங்களூரு : 'பைக்' திருடனை கைது செய்த போலீசார், குழந்தை கடத்தலை கண்டுப்பிடித்தனர்.

கடத்தப்பட்ட ஓராண்டுக்கு பின், குழந்தை தாயிடம் சேர்ந்தது. பெங்களூரின் ஜெ.ஜெ.நகரில் வசிப்பவர் ஆயாஜ் பாஷா. இவரது மனைவி அரபிந்த் தாஜ். இத்தம்பதியருக்கு, இரண்டு மகன்கள் இருந்தனர்.இரண்டு வயது மகன் மூத்த மகன் நோய்க்கு ஆளாகி உயிரிழந்தார். 2020 நவம்பர் 11ல், இத்தம்பதியரின் இரண்டு வயது மகன், வீட்டு முன் விளையாடும் போது, காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக, பேட்ராயனபுரா புரா போலீஸ் நிலையத்தில், தம்பதியர் புகார் செய்தனர். போலீசாரும் குழந்தையை தேடி வந்தனர். இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்து, வருத்தமடைந்த தம்பதியர், வேறொரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பி, டாக்டர்களை தொடர்பு கொண்டனர். தம்பதியரை பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு 'இனி குழந்தை பிறக்காது' என்பது தெரிந்தது. இதனால் மனம் நொந்த அரபிந்த் தாஜ், அவ்வப்போது பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்துக்கு சென்று, தன் குழந்தையை கண்டுப்பிடித்து தரும்படி, அழுது புலம்பி மன்றாடினார். உங்களால் முடியாவிட்டால், வழக்கை வேறு இடத்துக்கு மாற்றும்படி கோரினார்.
60 ஆயிரம் ரூபாய்

இந்நிலையில் பைக் திருட்டு தொடர்பாக, சில நாட்களுக்கு முன், கார்த்திக், 22, என்பவரை, பேட்ராயனபுரா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவரே, ஆயாஜ் பாஷா குழந்தையை கடத்தியவர் என்பது தெரிந்தது. காய்கறி வியாபாரியான கார்த்திக்குக்கு, சர்ஜாபுராவில் சிலருக்கு அறிமுகமாகினர். இப்பகுதியின் சுனிதா என்பவருக்கு குழந்தை இல்லாததை தெரிந்து கொண்ட கார்த்திக், குழந்தையை கடத்தி இப்பெண்ணுக்கு விற்க திட்டமிட்டார்.

ஆயாஜ் பாஷா வீட்டு அருகில், கார்த்திக் காதலி வசிக்கிறார். அவ்வப்போது அவரது வீட்டுக்கு சென்று வருவார். இது போன்று செல்லும் போது, ஆயாஜ் பாஷா குழந்தையை கவனித்த கார்த்திக், குழந்தையை கடத்திக்கொண்டு தப்பியோடினார். சர்ஜாபுராவுக்கு சென்று சுனிதாவிடம், 'எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளது. வளர்க்க முடியவில்லை. ஒரு குழந்தையை தத்து கொடுக்கிறேன்,' என கூறி, குழந்தையை கொடுத்து, 60 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.

சில நாட்களில் மனைவியுடன் வந்து, முறைப்படி குழந்தையை தத்து கொடுப்பது குறித்து, ஒப்பந்தம் செய்து கொள்வதாக கூறி சென்றார். அதன்பின் குழந்தையை அடையாளம் காண்பிக்க, சர்ஜாபுரா அருகிலுள்ள, சுனிதா வீட்டுக்கு அரபிந்த் தாஜை, போலீசார் அழைத்து சென்றனர்.குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வீட்டில் குழந்தை வளர்ந்ததால், அதற்கு அம்மொழியில் ஒரு வார்த்தையும் தெரியவில்லை. ஆனால் சரளமாக கன்னடம் பேசியது. அக்குழந்தை, தன் தாயை அடையாளம் கண்டு கொண்டு ஓடி வந்தது. சட்ட நடவடிக்கைகளை முடித்து, குழந்தையை தாயிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X