டெண்டர் ஒதுக்கீட்டில் கறார் காட்டும் காங்., புள்ளி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'டெண்டர்' ஒதுக்கீட்டில் கறார் காட்டும் காங்., புள்ளி!

Updated : செப் 01, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (2)
Share
நாயர் கொடுத்த இஞ்சி டீயை பருகியபடியே, ''முதல்வர் ஸ்டாலின் உண்மையிலேயே யாரை திட்டினாருன்னு தெரியாம முழிக்காவ வே...'' என, 'கச்சேரியை' ஆரம்பித்தார் அண்ணாச்சி.''முதல்வர் யாரை, ஏன் திட்டினாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''சென்னை ராயபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கும், அப்பகுதி மாவட்டச் செயலருக்கும் இடையே ரொம்ப நாளா சச்சரவு இருக்கு... கட்சி தலைமைகிட்ட ஒருவர்
டீ கடை பெஞ்ச்நாயர் கொடுத்த இஞ்சி டீயை பருகியபடியே, ''முதல்வர் ஸ்டாலின் உண்மையிலேயே யாரை திட்டினாருன்னு தெரியாம முழிக்காவ வே...'' என, 'கச்சேரியை' ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''முதல்வர் யாரை, ஏன் திட்டினாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''சென்னை ராயபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கும், அப்பகுதி மாவட்டச் செயலருக்கும் இடையே ரொம்ப நாளா சச்சரவு இருக்கு... கட்சி தலைமைகிட்ட ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் புகார் தெரிவிச்சுக்கிட்டே இருப்பாவ வே...''இது ரொம்ப முத்தி போனதால ரெண்டு பேரையும் அழைச்சு, முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்காரு வே...
அதுல என்ன வேடிக்கைன்னா மாவட்டத்தின் ஆதரவாளர்கள், 'மாவட்ட செயலருக்கு மரியாதை கொடுக்கணுமுன்னு எம்.எல்.ஏ.,வை முதல்வர் கடுமையாக கண்டிச்சாரு'ன்னு சொல்லுதாவ வே...''எம்.எல்.ஏ., தரப்போ, 'மாவட்ட செயலரை தான், முதல்வர் எச்சரிச்சு அனுப்பினாரு'ன்னு சொல்லுதாவ... உண்மையில முதல்வர் யாரை தான் கண்டிச்சாருன்னு தெரியாம, கட்சியினர் குழப்பத்துல இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சொந்த கட்சியினரே புறக்கணிக்கிறாங்களேன்னு தி.மு.க., - எம்.பி., தரப்புல புலம்புறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.''அய்யோ பாவம்... யாரு, என்னன்னு விபரமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''தே.மு.தி.க.,வுல இருந்து தி.மு.க.,வுக்கு தாவி, சேலம் எம்.பி.,யா இருக்குறவர் பார்த்திபன்... அவரது தலைமையில அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் பகுதிகள்ல, மின்னணு ரேஷன் கார்டுகளை மக்களுக்கு கொடுத்தாங்க பா...''இதுல கலந்துக்க அழைப்பு அனுப்பியும் மாநகர செயலர் ஜெயகுமார், அவைத் தலைவர் கலையமுதன், அப்பகுதியில இருக்குற கட்சி செயலர்கள் யாரும் கலந்துக்கலை பா...
''சரின்னு இருக்குற அரசு அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோருடன் சேர்ந்து, மக்களுக்கு ரேஷன் கார்டுகளை, எம்.பி., வழங்கியிருக்காரு... 'எம்.பி.,ங்கிற மரியாதையே இல்லையே'ன்னு, பார்த்திபன் ஆதரவாளர்கள் புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''கட்சியை வளர்க்க புது, 'டெக்னிக்'கை பயன்படுத்தறா ஓய்...'' என கடைசி தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...''காஞ்சிபுரம் மாவட்டத்துல தொழிற்சாலைகள் அதிகம் இருக்கறது ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில தான் ஓய்... அங்கே காங்., - எம்.எல்.ஏ.,வா இருக்கறவர், 'டெண்டர்' பணிகளை, 60 சதவீதம் காங்கிரசுக்கும், 40 சதவீதம் தி.மு.க.,வினருக்கும் ஒதுக்கணும்னு வலியுறுத்தி இருக்கார் ஓய்...
''அதோட, 100 பேருடன் வந்து காங்கிரசில் இணையுற ஒப்பந்ததாரருக்கு தான், டெண்டர் வழங்க பரிந்துரை செய்வேன்னு கறாரா சொல்லியிருக்கார் ஓய்...''நமக்கு டெண்டர் கிடைச்சா சரின்னு சில ஒப்பந்ததாரர்கள், காங்கிரசுக்கு மாற தயாராகிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.''மேடையில பேசுறப்ப, 'பெருந்தகை'ன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''அதுக்கு, 'சான்றோர்'னு அர்த்தம் பா...'' என விளக்கம் அளித்தார், அன்வர்பாய்.நண்பர்கள் இடத்தை காலி செய்ய, அடுத்த வாடிக்கையாளரை எதிர்நோக்கினார் நாயர்.

அமைச்சரின் ஸ்பெஷல் பி.ஏ., தேர்வானது எப்படி?
''அமைச்சர் மேல அதிருப்தியில இருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யார் ஓய் அது...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துல, தி.மு.க., இளைஞரணி நிர்வாகி சக்தி வடிவேலுக்கும், அவரது உறவினருக்கும் நிலத் தகராறு இருக்குது... இந்த விவகாரம், கோர்ட்லயும் இருக்குதுங்க...''சமீபத்துல ரெண்டு தரப்புக்கும் தகராறு நடந்து, பிரச்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு போச்சுங்க... அப்ப, 'இது சிவில் வழக்கு... இதுல போலீஸ் தலையிட வேண்டாம்'னு இளைஞர் அணி நிர்வாகிகள் சொல்லியிருக்காங்க...''ஆனா, சக்திவடிவேலை அமைச்சர் ஒருத்தருக்கு பிடிக்காதாம்...
இதனால அவர், 'சக்தி மேல வழக்கு போடுங்க'ன்னு போலீசாருக்கு அழுத்தம் தந்திருக்காருங்க...''உடனே இளைஞர் அணி நிர்வாகிகள், தி.மு.க., சுற்றுச்சூழல் பிரிவு மாநில நிர்வாகி கார்த்திகேய சிவசேனாபதியிடம் போயிருக்காங்க... அவரும் மேலிடத்துல பேசி, சக்தி மேல வழக்கு பதிவாகாம தடுத்துட்டாருங்க... அதே நேரம், அமைச்சரின் செயல், இளைஞர் அணி தரப்பினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.'

'சாமிநாதன் இப்படி உட்காருங்க...'' என்ற அன்வர்பாயே, ''வயசான நேரத்துல அலைய வேண்டியிருக்கேன்னு புலம்புறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''யாரு வே அது...'' எனக் கேட்டார் அண்ணாச்சி
.''தமிழக ஊரக வளர்ச்சி துறையில, ஓய்வு வயதை நெருங்குறவங்களுக்கு, பதவி உயர்வுல, கூடுதல், இணை இயக்குனர் பதவிகளை, கோவை, மதுரை, திருச்சி மாதிரியான பெருநகரங்கள்ல தருவாங்க... 10 வருஷத்துக்கு முன்ன நடந்த தி.மு.க., ஆட்சியில தான் இப்படி ஒரு உத்தரவை போட்டாங்க பா...''இதன்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்ட அலுவலகங்கள்ல, கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் பணியில இருக்காங்க...
''இப்ப, இந்த துறைக்கு செயலரா வந்திருக்கிற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபால், இவங்களை திடீர்னு வேற இடங்களுக்கு மாற்றம் செய்துடுறாரு... 'ஓய்வுல போற நேரத்துல, எ

.''இந்த அதிகாரி கதையையும் கேளுங்க வே...'' என, கடைசி தகவலுக்கு வந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...''திருப்பூர் மாவட்ட வணிக வரித்துறையில அதிகாரியா இருக்கிறவரை, வாய்மொழி உத்தரவா, துறையின் அமைச்சர் மூர்த்திக்கு ஸ்பெஷல் பி.ஏ.,வா நியமிச்சிருக்காவ... ரெண்டு மாசமா, அதிகாரி சென்னையில முகாமிட்டிருக்காரு வே...''அதே நேரம், பழைய பதவியையும் விடாம, அப்பப்ப திருப்பூருக்கு வந்து, முக்கியமான பைல்கள்ல கையெழுத்து போட்டுட்டு, சென்னைக்கு பறந்துடுதாரு...
'எனக்கு சீக்கிரமே ஸ்பெஷல் பி.ஏ.,க்கான ஆர்டர் வந்துடும்'னு சக அதிகாரிகளிடம் சொல்லிட்டு போறாரு வே...''அதிகாரி ஏற்கனவே கோவையில, இதே துறையின் அமலாக்க பிரிவுல இருந்திருக்காரு... வணிகவரி சட்டம் சார்ந்த நெளிவு சுளிவுகள், வர்த்தகர்களின், 'பல்ஸ்' பத்தி எல்லாம் நல்லா தெரிஞ்சவருங்கிறதால, சகல விதங்கள்லயும் தனக்கு அனுகூலமா இருப்பார்னு, அமைச்சர் 'செலக்ட்' செஞ்சிருக்கார்னு, துறை வட்டாரங்கள்ல பேசிக்கிடுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''சங்கரநாராயணன் சார்... சவுக்கியமா இருக்கேளா...'' என, எதிரில் வந்தவரிடம் குப்பண்ணா பேச ஆரம்பிக்க, நண்பர்கள் நடையை கட்டினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X