பொது செய்தி

இந்தியா

ஆலோசனை நடத்த அனுமதி; முன்னாள் முதல்வர் குமாரசாமி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடகாவின் முக்கிய விஷயங்கள் குறித்து, ஆலோசனை நடத்த ம.ஜ.த., குழுவினரை சந்திக்க வாய்ப்பளிக்கும்படி, மாநில அரசிடம், முன்னாள் முதல்வர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, குமாரசாமி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:ஒரு மாதமாக உங்களை சந்திக்க, நேரம் நிர்ணயிக்கும்படி, உயர் அதிகாரிகளிடம் அவ்வப்போது கோரியும், நேரம்

பெங்களூரு : கர்நாடகாவின் முக்கிய விஷயங்கள் குறித்து, ஆலோசனை நடத்த ம.ஜ.த., குழுவினரை சந்திக்க வாய்ப்பளிக்கும்படி, மாநில அரசிடம், முன்னாள் முதல்வர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, குமாரசாமி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:ஒரு மாதமாக உங்களை சந்திக்க, நேரம் நிர்ணயிக்கும்படி, உயர் அதிகாரிகளிடம் அவ்வப்போது கோரியும், நேரம் ஒதுக்கி தரவில்லை. எனவே நேரடியாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டி வந்தது. ஆகஸ்ட் 31ல் மதியம், நேரம் ஒதுக்கி கொடுத்தால், ம.ஜ.த.,வின் அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் குழுவுடன் உங்களை சந்திப்பேன்.

கர்நாடகாவின் மேகதாது, கிருஷ்ணா மேலணை, மகதாயி உட்பட, முக்கியமான நீர்ப்பாசன திட்டங்கள், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்த, அனுமதியளிக்கும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். எத்தினஹொளே திட்டத்தின், பைரகொன்ட்லு அணையின் தண்ணீர் சேகரிப்பு திறனை குறைப்பதால், பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர் மாவட்டங்களுக்கு, குடிநீர் வழங்குவதில் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, ஆலோசனை நடத்த வேண்டும். நான்கு ஆண்டுகளாக, மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

வெள்ள பாதிப்பு; காட்டு யானைகளின் தொந்தரவால், நஷ்டமடைந்தோருக்கு, உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும், நிவாரண நிதியை, ஒரு லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்சமாக அதிகரிக்க வேண்டும். நிவாரணம் பெற, எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கக்கூடாது. பல முக்கிய விஷயங்களை பற்றி ஆலோசிக்க, ம.ஜ.த., குழுவினருக்கு நேரம் ஒதுக்கித்தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X