பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் அமளி களால் பெரும்பாலும் முடங்கியது. ஆனாலும் இந்தக் கூட்டத் தொடர் புதிய நட்பை ஏற்படுத்தி உள்ளது.

போன் ஒட்டு கேட்பு விவகாரம், விவசாயிகள் பிரச்னை என பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் அதகளப்பட்டது. எதிர்ப்புபொது காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மசோதாவுக்கு, தேசியவாத காங்., திரிணமுல் காங்., கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இது ஒருபுறம் இருக்க, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் மற்றும் தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் மகளும், எம்.பி.,யுமான சுப்ரியா சுலே இடையே புதிய நட்பு ஏற்பட்டுள்ளது.
பாரம்பரிய, பழங்கால நகைகள் மீது சுப்ரியாவுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் அணிந்து வந்த ஒரு நெக்லஸ் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.சபையில் அமளிகளுக்கு இடையே நிர்மலா சீதாராமனிடம் சென்று, அந்த நகை குறித்து விபரம் கேட்டுள்ளார்.இது போன்ற பாரம்பரிய நகைகளை தன் பெற்றோர் கொடுத்ததாக கூறி, அதன் சிறப்புகளையும் நிர்மலா சீதாராமன் விளக்கிஉள்ளார்.

அது முதல் இருவருக்கும் இடையே நட்பு அதிகரித்துள்ளது.காரியம் சாதிப்புகாங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, தி.மு.க.,வின் கனிமொழியுடன் மிகவும் நெருக்கமாக சுப்ரியா சுலே பழங்கி வந்தார்; அவர் வாயிலாக பல காரியங்களை சாதித்தார்.
தற்போது நிர்மலா சீதாராமனுடன் நட்புடன் உள்ளார்.'தந்தையைப் போலவே மிகவும் சாதுர்யமான அரசியல்வாதி சுப்ரியா. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுடனான நட்பு, தன் அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார்' என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE