பொது செய்தி

இந்தியா

அமைச்சர் முருகேஷ் நிரானி தனது கருத்துக்கு வருத்தம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கலபுரகி : 'கலபுரகி மாவட்ட மக்கள் சோம்பேறிகள்' என, தான் கூறிய வார்த்தைக்கு, பெரிய, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி வருத்தம் தெரிவித்துள்ளார். பாகல்கோட்டையில், சில நாட்களுக்கு முன், ஊடகத்தினர் சந்திப்பில், அமைச்சர் முருகேஷ் நிரானி, 'கலபுரகி மாவட்ட மக்கள் சோம்பேறிகள்' என, விமர்சித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மாவட்ட மக்கள், காங்கிரஸ்

கலபுரகி : 'கலபுரகி மாவட்ட மக்கள் சோம்பேறிகள்' என, தான் கூறிய வார்த்தைக்கு, பெரிய, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாகல்கோட்டையில், சில நாட்களுக்கு முன், ஊடகத்தினர் சந்திப்பில், அமைச்சர் முருகேஷ் நிரானி, 'கலபுரகி மாவட்ட மக்கள் சோம்பேறிகள்' என, விமர்சித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மாவட்ட மக்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரியங்க் கார்கே, முன்னாள் அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் என, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து, கலபுரகியில் அமைச்சர் முருகேஷ் நிரானி, நேற்று கூறியதாவது:என் மனதிலிருந்து, நான் அந்த வார்த்தையை கூறவில்லை. இத்தகைய வார்த்தை, என் வாயிலிருந்து வந்தது, எனக்கும் வருத்தமளிக்கிறது. என்னால் யாருக்காவது, வருத்தம் ஏற்பட்டிருந்தால், அதற்காக வருந்துகிறேன். நான் கூறியதன் நோக்கமே வேறு; கலபுரகி அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், நான் அப்படி கூறினேன். கலபுரகி மாவட்டம் மற்றும் மக்களின் மீது எனக்கு மிகுந்த அக்கறை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X