அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை 'சம்மன்' : மம்தா பாய்ச்சல்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி-'மேற்கு வங்க நிலக்கரி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, ஆளும் திரிணமுல் காங்., - எம்.பி.,யும், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி ருஜிரா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை 'சம்மன்' அனுப்பி உள்ளது.வழக்கு பதிவுமேற்கு வங்கத்தின் பசிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள இரு நிலக்கரி சுரங்கங்களில் 1,352 கோடி

புதுடில்லி-'மேற்கு வங்க நிலக்கரி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, ஆளும் திரிணமுல் காங்., - எம்.பி.,யும், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி ருஜிரா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை 'சம்மன்' அனுப்பி உள்ளது.



latest tamil news



வழக்கு பதிவு

மேற்கு வங்கத்தின் பசிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள இரு நிலக்கரி சுரங்கங்களில் 1,352 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, கடந்த ஆண்டு சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, நிலக்கரி ஊழலில் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணமுல் காங்., இளைஞர் அணியின் தலைவர் வினய் மிஸ்ராவின் சகோதரர் விகாஸ் மிஸ்ரா உட்பட இருவரை கைது செய்தனர்.இந்த மோசடியில் திரிணமுல் காங்., எம்.பி.,யும், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜிக்கும் பங்கு வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது; அதை அபிஷேக் மறுத்தார்.

இதற்கிடையே 'நிலக்கரி மோசடி வழக்கில் செப்., 6ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதிகாரிகள்அபிஷேக்கின் மனைவி ருஜிராவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் மட்டுமின்றி, அபிஷேக்குடன் நெருக்கமாக இருந்த சில ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news



மம்தா பாய்ச்சல்!

அமலாக்கத்துறை 'சம்மன்' குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:பா.ஜ.,வும், மத்திய அரசும் அரசியல் ரீதியாக எங்களை வெல்ல முடியாது என்பதை சட்டசபை தேர்தலில் உணர்ந்தனர். எனவே, அபிஷேக் பானர்ஜி மற்றும் கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசின் அமைப்புகளை பயன்படுத்துகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, கூட்டாட்சி கட்டமைப்பை இடித்து அகற்ற முயற்சிக்கிறது. இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் போராட்டங்களை தொடருவோம். பா.ஜ., அமைச்சர்கள் மற்றும் சில தலைவர்கள், நிலக்கரி மோசடி 'மாபியா'க்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். இது தொடர்பாக எங்களிடம் உள்ள ஆதாரங்களை அமலாக்கத்துறையிடம் வழங்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
29-ஆக-202112:31:34 IST Report Abuse
கல்யாணராமன் சு. தமிழக மந்திரிகளும் (அதிமுகவிற்கு அறிவுரை கூறும்), முக்கியமாக ஸ்டாலினும் தங்களுடைய adopted சகோதரிக்கு "சட்டம் தன் கடமையை செய்யும்... மடியில் கனம் இல்லயென்றால் வழியில் பயப்பட வேண்டாம்" என்றெல்லாம் அறிவுரை கூறவேண்டும்.. ஸ்டாலின்தான் இதற்குத் தகுதியானவர், ஏனென்றால் அவருக்கு வங்காள மொழி தெரியும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
29-ஆக-202110:25:51 IST Report Abuse
RajanRajan அந்நிய கைக்கூலி ரோஹிங்கியா கூட்டம் இருக்கும் வரை மம்மு இப்படி தான் ஆட்டம் போடும். எனவே மத்திய அரசு இந்த அந்நிய ரொஹிங்கியாக்களை முதலில் நாடு கடத்த வேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
29-ஆக-202109:03:49 IST Report Abuse
duruvasar இந்த அம்மாவுக்கு தான் ஒரு பெரிய அம்மாடக்கரின்னு நெனைப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X