சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கொலைபுறம்' ஆகிடும்!

Updated : செப் 01, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரையில், தொழிலாளர் நலத் துறை சார்பில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது.இதில், வாரிய தலைவர் பொன்குமார் பேசுகையில், 'முனிரத்தினம் என்ற பெயரில், 'த்' என்ற எழுத்து இல்லை என்பதற்காக ஒரு மனுவை, அதிகாரிகள் நிலுவையில் வைத்திருந்தனர். தொழிலாளர்கள் வழங்கும் மனுக்களை, அற்ப காரணங்களுக்காக
பக்கவாத்தியம்


மதுரையில், தொழிலாளர் நலத் துறை சார்பில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது.இதில், வாரிய தலைவர் பொன்குமார் பேசுகையில், 'முனிரத்தினம் என்ற பெயரில், 'த்' என்ற எழுத்து இல்லை என்பதற்காக ஒரு மனுவை, அதிகாரிகள் நிலுவையில் வைத்திருந்தனர்.
தொழிலாளர்கள் வழங்கும் மனுக்களை, அற்ப காரணங்களுக்காக அதிகாரிகள் தள்ளுபடி செய்யக் கூடாது. அதிகாரிகள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.அங்கிருந்த அதிகாரி ஒருவர், 'இவரு சாதாரணமாக, 'த்' என்ற எழுத்து இல்லாதது ஒரு பிரச்னை இல்லை என்கிறார்... 'கொல்லைபுறம்' என்பதில் 'ல்' இல்லைன்னா, 'கொலைபுறம்' ஆகிடும்... பார்த்துக்குங்க...' என்றார். சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

'மோசடியை கண்டுக்காதீங்க!'
கோவை மக்கள் சேவை மையம் மற்றும் 'சக் ஷம்' அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, காந்திபுரத்தில் சமீபத்தில் நடந்தது.

இதில், கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பங்கேற்றார்.அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தரம் குறித்து, அரசு ஆய்வு செய்யலாம். ஆனால், திட்டங்களில் குறைகளை கண்டறிவதிலேயே நேரத்தை செலவிட கூடாது.புதிதாக ஆக்கப்பூர்வ திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'கடந்த ஆட்சியில நடந்த மோசடிகளை கண்டுக்காம விட்டுடுங்கன்னு 'பாலீஷா' சொல்லுற மாதிரி இருக்கே... என்ன காரணமாக இருக்கும்?' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

'மக்களை ஏன் ஏமாற்றணும்?

'ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் கொரோனா நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.இதில், தி.மு.க.,வின் நீலகிரி எம்.பி., ராஜா பேசுகையில், 'நடப்பாண்டு போடப்பட்டிருப்பது ஒரு குறை பட்ஜெட். ஏனென்றால் இதற்கு முந்தைய பட்ஜெட், பழனிசாமி அரசு போட்டது. தற்போது நிதி நெருக்கடி காரணமாக, தமிழக அரசு புதிய திட்டங்களை அறிவிப்பதில், பல சிரமங்கள் இருப்பதை மக்கள் அறிவர்' என்றார்.

அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தமிழகத்தின் கடன் எவ்வளவு என்பது தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தெரியாதா? அப்புறம் எதற்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை கொடுத்து, மக்களை ஏமாற்றணும்... எப்படியாவது ஆட்சியை பிடிக்கணும்ன்னு தானே...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-ஆக-202115:35:43 IST Report Abuse
D.Ambujavalli அப்போது எதிர்க்கட்சியாக இவ்வளவு அறிவிப்புகள், செலவினங்களுக்கு நிதி உள்ளதா என பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கேள்வி கேட்டார்களா? அறிக்கை மீது தங்கள் விமர்சனத்தை ஒவ்வொரு அம்சமாக அலசி ஆராய்ந்தார்களா?பத்து நாள் கூட்டத்தில் எட்டு நாள் வெளி நடப்பு செய்துவிட்டு, இன்றுதான் முதன்முதலாக சட்டமன்றம் வருவது போல பாமரனை வேண்டுமானால் ஏமாற்றலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X