பொது செய்தி

தமிழ்நாடு

ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு ரயிலு... கலக்குது பாரு, இதன் ஸ்டைலு!

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை - சென்னை இடையே சாதாரண ரயில் பெட்டிகளுடன் கோவை எக்ஸ்பிரஸ் இயங்கி வந்தது. கடந்த 1ம் தேதி முதல் எல்.ெஹச்.பி., பெட்டிகளை கொண்டதாக ரயில் மாற்றப்பட்டது. ஏ.சி., படுக்கை, சாதாரண படுக்கை வசதி உள்பட 23 பெட்டிகளும் நவீன முறையில் மாற்றப்பட்டுள்ளது.சாதாரண பெட்டிகளில் இடநெருக்கடி நிலவியதுடன், இருக்கை அமைப்பு பயணிகளுக்கு சிரமமானதாக இருந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள எல்.ெஹச்.பி.,
 ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு ரயிலு... கலக்குது பாரு, இதன் ஸ்டைலு!

கோவை - சென்னை இடையே சாதாரண ரயில் பெட்டிகளுடன் கோவை எக்ஸ்பிரஸ் இயங்கி வந்தது. கடந்த 1ம் தேதி முதல் எல்.ெஹச்.பி., பெட்டிகளை கொண்டதாக ரயில் மாற்றப்பட்டது. ஏ.சி., படுக்கை, சாதாரண படுக்கை வசதி உள்பட 23 பெட்டிகளும் நவீன முறையில் மாற்றப்பட்டுள்ளது

.சாதாரண பெட்டிகளில் இடநெருக்கடி நிலவியதுடன், இருக்கை அமைப்பு பயணிகளுக்கு சிரமமானதாக இருந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள எல்.ெஹச்.பி., பெட்டிகளில் விசாலமான இருக்கை வசதி உள்ளது.நீளமான இருக்கை, முன்பதிவு பெட்டியில் சொகுசாக உறங்கும் வசதி ஆகியன, சதாப்தி, ராஜதானி ரயில்களில் உள்ளது போன்று உள்ளது.

ஒவ்வொரு இருக்கையிலும் சார்ஜிங் 'பிளக் பாயின்ட்' வசதி உள்ளது.ரயில் பயணிகள் கூறுகையில்,' சென்னை - பெங்களூரு, சென்னை - டில்லி இடையே இயக்கப்பட்டு வந்த உயர் ரக ரயில்களில் மட்டும் எல்.ெஹச்.பி., பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது, கோவையில் இருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரசிலும் இருக்கை விசாலமான பெட்டி மாற்றப்பட்டுள்ளதால், வீட்டில் இருப்பது போன்ற அனுபவம் உள்ளது. பயணம் சுகமானதாக மாறி விட்டது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தனியார் பேருந்துகளில் சீட் சரியாக அமைத்திருந்தார்கள் இன்றோ அரசுகள் பேராசையினால் நெருக்கியடித்து ஆடுமாடுகளைப்போல அடைத்து காசை அள்ளப் பார்க்கிறது போட்டோவில் கண்டுள்ள செங்குத்தான சீட்டுகள் ஏழு மணிநேர பயணத்துக்கு ஏற்றதல்ல LEG SPACE ஐ குறைத்து சீட்டை சற்றெ சாய்வாக ரிலாக்ஸ் செய்து கொள்ள வழிவகை காண வேண்டும் சீட்டின் நுனி இரண்டு அங்குலம் உயரமாகவும் சாய்மானத்தின் உச்சி இரண்டு அங்குலம் பின்னுக்கு தள்ளியம் அமைக்க வேண்டும் திரைமலர் ICF மேலாளரை சந்தித்து இந்த கருத்தை விளக்க வேண்டும்
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
31-ஆக-202107:17:37 IST Report Abuse
visu கட்டணம் எவளவு உயர்ந்தது எதனை பேர் கூடுதலாக பயணிக்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X