கோடநாடு வழக்கு தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ரகசிய விசாரணை...| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ரகசிய விசாரணை...

Added : ஆக 29, 2021
Share
ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சயான் இவ்வழக்கு சம்பந்தமாக சில தகவல்களை தெரிவிப்பதாக போலீசாரிடம் மனு அளித்தார். பின், போலீசார் சயானுக்கு சம்மன் அனுப்பி கடந்த, 17ம் தேதி 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வீடியோவில் பதிவு செய்தனர். இந்த விசாரணைக்குப்

ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சயான் இவ்வழக்கு சம்பந்தமாக சில தகவல்களை தெரிவிப்பதாக போலீசாரிடம் மனு அளித்தார். பின், போலீசார் சயானுக்கு சம்மன் அனுப்பி கடந்த, 17ம் தேதி 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வீடியோவில் பதிவு செய்தனர்.
இந்த விசாரணைக்குப் பின், ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம், கடந்த, 23ம் தேதி ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இருவரின் விசாரணை அறிக்கையை கடந்த 27ம் தேதி நடந்த விசாரணையில் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுவார்கள் என, எதிர்பார்க்கப்பட்டது ஆனால், தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்தில், எஸ்.பி., ஆசிஷ் ராவத் தலைமையில், விசாரணை அதிகாரி வேல்முருகன், டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் எஸ்டேட்டில், கொலை சம்பவம் நடந்த, 2017ம் ஆண்டு ஏப்., 24ம் தேதியில், கோடநாடு எஸ்டேட், கெரடா மட்டம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த, முதற்கட்டமாக, 10 போலீசாரிடம், இன்று மாலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை நான்கு மணி நேரம் விசாரணை நடத்தி வீடியோவில் பதிவு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X