பொது செய்தி

இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல்? உளவுத்துறை எச்சரிக்கை!

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக உளவுத் துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பு அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. இதற்கிடையே, சமீபத்தில் ஆப்கானிஸ்தான் சென்ற பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பினர், தலிபான் அமைப்பின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசி உள்ளனர்.
ஜம்மு, காஷ்மீர், பயங்கராவாத தாக்குதல், உளவுத்துறை, எச்சரிக்கை

புதுடில்லி-ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக உளவுத் துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பு அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. இதற்கிடையே, சமீபத்தில் ஆப்கானிஸ்தான் சென்ற பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பினர், தலிபான் அமைப்பின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசி உள்ளனர். இதில், இந்தியாவில் நடத்தப்பட வேண்டிய தாக்குதல் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புஉள்ளதாக, உளவுத் துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இது தொடர்பான அறிக்கை, மாநில உளவுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து, உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சமூக ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்க உளவுத் துறை அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்த, பாக்., பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. எனவே, எச்சரிக்கையாக இருக்கும்படி பாதுகாப்பு அமைப்புகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
29-ஆக-202109:01:07 IST Report Abuse
duruvasar முதற்கட்டமாக இங்கேயுள்ள சில பேர்களை ரவுண்டு கட்டணும்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
29-ஆக-202108:44:36 IST Report Abuse
 Muruga Vel இந்த தலிபான் கும்பல் கரூர் கும்பகோணம் சைசில் இருக்கும் குவைத் சவுதி போன்ற செல்வ செழிப்பு நாடுகளில் கலவரம் பண்ணி ஆட்சியை கைப்பற்ற பாடு படும் இரான் பாகிஸ்தான் போன்ற தோழமை நாடுகள் அதுக்கு உதவி செய்யும் ...காஷ்மீர் பகுதியில் கலவரம் பண்ணி எந்த பிரயோஜனமும் இல்லை ..
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
29-ஆக-202107:07:37 IST Report Abuse
 Muruga Vel காஷ்மீரில் இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் டேவலப்மென்ட் வேலை நிமித்தமாக மூன்று ஆண்டுகள் தங்கி நிலம் கையகப்படுத்தும் ஆவணங்களுக்காக கிராமம் கிராமமாக செல்ல வேண்டியிருந்தது ...பொதுவாகவே மக்கள் டெர்ரரிசம் மீது வெறுப்பில் இருப்பது புரிந்து கொள்ள முடிந்தது ..குறிப்பாக டில்லியில் படித்த இளம் பெண்கள் காஷ்மீரில் வாழவே விரும்புவதில்லை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X