பா.ஜ., - எம்.எல்.ஏ., போன் ஒட்டுக்கேட்பு வழக்கு ஆதாரம் கிடைக்காததால் விரைவில் முற்றுப்புள்ளி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பா.ஜ., - எம்.எல்.ஏ., போன் ஒட்டுக்கேட்பு வழக்கு ஆதாரம் கிடைக்காததால் விரைவில் முற்றுப்புள்ளி

Added : ஆக 29, 2021
Share
பெங்களூரு : பல கோணங்களில், விசாரணை நடத்தியும் சாட்சி, ஆதாரங்கள் கிடைக்காததால், தார்வாட் பா.ஜ., -எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத்தின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு விசாரணைக்கு, முற்றுப்புள்ளி வைக்க, விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, அரசுக்கு அதிகாரப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய, தயாராகின்றனர். கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பாக, பரபரப்பான சூழ்நிலை

பெங்களூரு : பல கோணங்களில், விசாரணை நடத்தியும் சாட்சி, ஆதாரங்கள் கிடைக்காததால், தார்வாட் பா.ஜ., -எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத்தின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு விசாரணைக்கு, முற்றுப்புள்ளி வைக்க, விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, அரசுக்கு அதிகாரப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய, தயாராகின்றனர். கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பாக, பரபரப்பான சூழ்நிலை உருவான நேரத்தில், தார்வாட் பா.ஜ., -- எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத், அடுத்த முதல்வர் என கூறப்பட்டது. இவ்வேளையில் அவர் தன், தொலைபேசி ஒட்டு கேட்பதாகவும், மோசடி வழக்கில் சிறையில் உள்ள யுவராஜ், சிறையிலிருந்தே தொலைபேசி மூலம், தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசாரிடம் புகார் செய்திருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த, அன்றைய முதல்வர் எடியூரப்பா, பெங்களூரு சேஷாத்ரிபுரம், துணை மண்டல ஏ.சி.பி., பிருத்வி தலைமையில் குழு அமைத்தார். இக்குழுவும் பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.இதற்கிடையில், அரவிந்த் பெல்லதுக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படும், மொபைல் எண் ஹைதராபாத்திலுள்ள, அவரது நண்பரின் எண்ணாகும். போலீசாரும் ஹைதராபாத் சென்று, விசாரணை நடத்தியும் சரியான தகவல் கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ.,வை மிரட்டியதாக கூறப்பட்ட, பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள யுவராஜிடமும், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிறையில் உள்ள அவருக்கு, மொபைல் கொடுத்ததாக கூறப்பட்ட, அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறையில் யுவராஜ் இருந்த அறை, சிகிச்சை பெற்ற மருத்துவமனை வார்டிலும், விசாரணை நடத்தப்பட்டது. யுவராஜின் பாதுகாப்புக்காக, நியமிக்கப்பட்டிருந்த போலீசாரிடம், தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத்தை, யுவராஜ் மிரட்டியதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

அதே போன்று இவரது தொலைபேசி ஒட்டுக்கேட்டது பற்றியும், தொழில்நுட்ப ரீதியில் விசாரணை நடத்தியும், ஆதாரங்கள் கிடைக்கவில்லை. பல கோணங்களில் விசாரணை நடத்தியும், குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் சாட்சி, ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே விசாரணையை முடித்த அதிகாரிகள், இன்னும் சில நாட்களில், அரசுக்கு அறிக்கை அளிக்கவும் தயாராகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X