பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆக., 29, 1985சென்னை மயிலாப்பூரில், 1910 நவ., 20ல் பிறந்தவர், மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன். சுருக்கமாக, எம்.கே.ராதா.அவரின் தந்தை கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் நடித்து வந்தார். 1936ல் வெளியான சதிலீலாவதி படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படத்தின் நாயகி எம்.எஸ்.ஞானாம்பாளையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.'ஜெமினி' நிறுவனத்தின் நிரந்தர நடிகராக பணியாற்றினார். அதன் பின்
 இதே நாளில் அன்று

ஆக., 29, 1985

சென்னை மயிலாப்பூரில், 1910 நவ., 20ல் பிறந்தவர், மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன். சுருக்கமாக, எம்.கே.ராதா.அவரின் தந்தை கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் நடித்து வந்தார். 1936ல் வெளியான சதிலீலாவதி படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படத்தின் நாயகி எம்.எஸ்.ஞானாம்பாளையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

'ஜெமினி' நிறுவனத்தின் நிரந்தர நடிகராக பணியாற்றினார். அதன் பின் மாயா மச்சீந்திரா, வனமோகினி, அபூர்வ சகோதரர்கள், சந்திரலேகா உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கத்திச் சண்டை, குதிரையேற்றத்தில் புகழ் பெற்றவராக விளங்கினார்.'பத்ம ஸ்ரீ, கலைமாமணி' உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

1985 ஆக., 29ம் தேதி தன் 74வது வயதில் இயற்கை எய்தினார். எம்.கே.ராதாவின் நினைவாக, இந்திய அஞ்சல் துறை, அவரது உருவப்படத்துடன் சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டது.நடிகர் எம்.கே.ராதா காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
30-ஆக-202102:11:19 IST Report Abuse
Bhaskaran அவர் நடித்த அபூர்வ சகோதரர்கள் சந்திரலேகா போர்ட்டர் கந்தன் புதையல் பாசவலை போன்றவை மட்டுமே டிவி யில் எப்போதாவது போடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X