பொது செய்தி

இந்தியா

சிறப்பு பாதையில் பள்ளி பஸ்கள்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரு வெளி வட்ட சாலையில் உள்ள மாநகர பஸ்சுக்கான சிறப்பு பாதையில், மற்ற பஸ்கள் செல்வதற்கு போக்குவரத்து கழகம் அனுமதித்து உள்ளது.பெங்களூரு சில்க் போர்டு முதல் கே.ஆர்.புரம் வரை உள்ள வெளி வட்ட சாலையில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில், ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அப்பகுதியில் உள்ள ஐ.டி.,

பெங்களூரு : பெங்களூரு வெளி வட்ட சாலையில் உள்ள மாநகர பஸ்சுக்கான சிறப்பு பாதையில், மற்ற பஸ்கள் செல்வதற்கு போக்குவரத்து கழகம் அனுமதித்து உள்ளது.பெங்களூரு சில்க் போர்டு முதல் கே.ஆர்.புரம் வரை உள்ள வெளி வட்ட சாலையில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில், ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது.

இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அப்பகுதியில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் பணி புரிவோர் அடுத்தாண்டு வரை வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை செய்யுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.வெளி வட்ட சாலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல, மாநகர பஸ்களுக்கு மட்டும் சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், மற்ற பஸ்கள், பள்ளி, கல்லுாரி வேன்களும் சிறப்பு பாதையில் இயக்கிக்கொள்வதற்கு மாநகர போக்குவரத்து கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் சமூக ஆலோசகர்கள் அதிருப்தி தெரிவித்துஉள்ளனர்.மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வேறு விதமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்துகின்றனர்.மாநகர பஸ்களின் சிறப்பு பாதையில் மற்ற வாகனங்கள் பயன்படுத்த அனுமதிப்பதால், பாதையின் தரம் சேதமடைவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X