குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை 'பாய்லர்' வெடித்து பலி 5 ஆக உயர்வு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு : மாகடி சாலையின், கோபாலபுராவில் உள்ள உணவுப்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில், பாய்லர் வெடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை, 5 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரு மாகடி சாலையின், கோபாலபுரா 5வது குறுக்கு சாலையில், தனியார் தொழிற்சாலையில், ஆகஸ்ட் 23ல் பாய்லர் வெடித்ததில் தொழிலாளர்கள் மனிஷ், 21, சவுரவ், 24, தனலட்சுமி, 52, தொழில் பங்குதாரர் சச்சின் மேஹ்தா, 35, உயிரிழந்தனர். இந்த

பெங்களூரு : மாகடி சாலையின், கோபாலபுராவில் உள்ள உணவுப்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில், பாய்லர் வெடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை, 5 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு மாகடி சாலையின், கோபாலபுரா 5வது குறுக்கு சாலையில், தனியார் தொழிற்சாலையில், ஆகஸ்ட் 23ல் பாய்லர் வெடித்ததில் தொழிலாளர்கள் மனிஷ், 21, சவுரவ், 24, தனலட்சுமி, 52, தொழில் பங்குதாரர் சச்சின் மேஹ்தா, 35, உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், சாந்தி, 43, என்பவர் தீக்காயங்களுடன் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.

தலைமறைவாக உள்ள தொழிற்சாலை உரிமையாளர் விஜய் மேஹ்தாவை, போலீசார் தேடி வருகின்றனர். ஆவணங்களை ஆய்வு செய்த போது, அவர் தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றிருப்பது தெரிந்தது.குடியிருப்பு பகுதியில், தொழிற்சாலை நடத்த அதிகாரிகள் அனுமதியளித்திருப்பது, சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. அசம்பாவிதங்களை தடுக்க, தேவையான உபகரணங்களும் பொருத்தவில்லை.எனவே விஜய் மேஹ்தா, இறந்த சச்சின் மேஹ்தா, கட்டட உரிமையாளர் சுரேந்திரா மீது வழக்கு பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X