ஜெர்மனியிலிருந்து போதைப்பொருள் வரவழைப்பு ; பெங்களூரில் என்.சி.பி., அதிகாரிகள் கண்டுபிடிப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு : அட்டைப்பெட்டியில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை ஒளித்து வைத்து ஜெர்மனியிலிருந்து தபால் மூலம் பார்சலில் வரவழைத்த பெண்ணை, என்.சி.பி., அதிகாரிகள் கைது செய்தனர். பெங்களூரின் எலக்ட்ரானிக்சிட்டியில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு, பார்சல்களில் போதைப்பொருள் வருவதாக, என்.சி.பி., எனும் தேசிய போதைப்பொருள் கண்டுப்பிடிப்பு படையினருக்கு தகவல்

பெங்களூரு : அட்டைப்பெட்டியில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை ஒளித்து வைத்து ஜெர்மனியிலிருந்து தபால் மூலம் பார்சலில் வரவழைத்த பெண்ணை, என்.சி.பி., அதிகாரிகள் கைது செய்தனர்.

பெங்களூரின் எலக்ட்ரானிக்சிட்டியில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு, பார்சல்களில் போதைப்பொருள் வருவதாக, என்.சி.பி., எனும் தேசிய போதைப்பொருள் கண்டுப்பிடிப்பு படையினருக்கு தகவல் வந்தது.எனவே வெளி நாடுகளிலிருந்து வரும் பார்சல்களை, அதிகாரிகள் பரிசோதிக்கின்றனர். சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து பார்சல் ஒன்று வந்திருந்தது.

சந்தேகமடைந்த என்.சி.பி., அதிகாரிகள், பார்சலை பிரித்து பார்த்த போது, கண்ணாடி, மருந்து, பாதத்தை மசாஜ் செய்யும் சாதனம், டேபிள் டென்னிஸ் பேட், சாக்லெட்கள் இருந்தது.அதனடியில் ஒரு கிலோ மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ., போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. பார்சலை பெற வருவோரை, என்.சி.பி., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

ஆகஸ்ட் 26ல், யோகிதா, 30, என்பவர் பார்சலை பெற வந்த போது, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். போதைப்பொருளை ஜெர்மனியிலிருந்து வர வழைத்ததை ஒப்புக்கொண்டார். ஆப்பிரிக்காவை சேர்ந்த தன் நண்பர், ஜெர்மனியிலிருந்து அனுப்பினார். மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் விற்பனை செய்கிறார்.பெங்களூரில் போதைப்பொருள் வியாபாரிகள், பார்ட்டிகளுக்கு சப்ளை செய்வது விசாரணையில் தெரிந்தது. என்.சி.பி., அதிகாரிகள் கூறியதாவது:தென் மாநிலங்களின், பல்வேறு நகரங்களில் பதுங்கியுள்ள, போதைப்பொருள் வியாபாரிகள், 'டார்க் நெட்' மூலம் வெளிநாட்டு வியாபாரிகளை தொடர்பு கொண்டு போதைப்பொருள் வாங்குகின்றனர்.

பணம் கைக்கு வந்ததும் பார்சல்களில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து, வெளிநாட்டு தபால் மூலம் அனுப்புகின்றனர். கொரோனா நேரத்தில் டார்க் நெட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்தது. பார்ட்டிகளுக்கு பெருமளவில் போதைப்பொருட்கள் சப்ளையாகிறது.எம்.டி.எம்.ஏ., போதைப்பொருளை உட்கொள்வதால், மூளைக்கு பாதிப்பை ஏற்படும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X