பொது செய்தி

இந்தியா

ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (5+ 10)
Share
Advertisement
புதுடில்லி-வேறு மாநிலங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள், பதிவு எண்ணை மாற்றாமல் வாகனங்களை பயன்படுத்தும் வகையில், 'பி.எச்., சீரிஸ்' என்ற பதிவு எண்ணை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.ராணுவ அதிகாரிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவதால்,

புதுடில்லி-வேறு மாநிலங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள், பதிவு எண்ணை மாற்றாமல் வாகனங்களை பயன்படுத்தும் வகையில், 'பி.எச்., சீரிஸ்' என்ற பதிவு எண்ணை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.



latest tamil news


ராணுவ அதிகாரிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவதால், அவர்கள் வேறு மாநிலத்திற்கு செல்லவேண்டி உள்ளது.இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும், அந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது, அவற்றின் பதிவு எண்ணை மாற்றப்பட வேண்டிய நிலையும் இருந்து வந்தது.

அப்படி பணியிடமாற்றம் செய்யப்படும் ஊழியர்களுக்காக மத்திய போக்குவரத்துத் துறை ஒரு புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:வேறு மாநிலங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்படும் ஊழியர்களுக்காக, பி.எச்., சீரிஸ் எனப்படும் பாரத் சீரிஸ் பதிவு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த எண், 'YY BH #### XX' என்ற முறையில் இருக்கும். இதில், 'YY' என்பது முதலில் பதிவு செய்த ஆண்டை குறிக்கும். 'BH' என்பது, பாரத் சீரிஸ் குறியீடு. '####' என்ற இடத்தில் நான்கு எண்களும்; 'XX' என்ற இடத்தில் இரண்டு எழுத்துக்களும் இருக்கும். இந்த சீரிஸ் எண்ணை ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது.எந்த மாநிலத்திற்கு சென்றாலும் இதே எண்ணுடன் வாகனத்தை பயன்படுத்தலாம்.

இந்த பி.எச்., எண் பதிவு செய்ய மோட்டார் வாகன வரி செலுத்தப்பட வேண்டும். 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களுக்கு 8 சதவீத வரியும்; 10 முதல், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களுக்கு, 10 சதவீத வரியும்; 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான வாகனங்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
29-ஆக-202117:01:14 IST Report Abuse
தமிழ்வேள் 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள கார்களுக்கு இன்னொரு பத்து லட்சம் வரி போடலாம் ...இவை பணப்பக்கட்டை வெளிக்காட்ட மட்டுமே வாங்கப்படுபவை ...அதிக ஆடம்பரம் ,மிக அதிக வரி என்று இருந்தால் படாடோபம் குறையும் .......
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-ஆக-202112:21:23 IST Report Abuse
Ramesh Sargam இந்த புதிய அறிவிப்பு எல்லா பொதுமக்களுக்கும் பொருந்துமாறு இருந்திருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும்.
Rate this:
Cancel
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
29-ஆக-202112:04:59 IST Report Abuse
T.S.SUDARSAN எஸ்ஸெல்லெண்ட் பதிவு. எல்லோருக்கும் இதை செய்யவேண்டும். பாரதம் புரா ஒரே தடவை செய்தல் ஊழல் குறையும். 15 வருடம் முடிவில் காரை உடைத்துவிடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X