சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடுவானில் உயிரிழந்த வாலிபர் மனைவி, உறவினர்கள் கதறல்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருச்சி-மலேஷியாவில் வேலைக்கு சென்றவர் நான்கு ஆண்டுகளுக்கு பின் ஊர் திரும்புகையில், விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 36. இவரது மனைவி நிஷா, 25. திருமணம் ஆகி, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணம் ஆகி, இரண்டு மாதத்தில் மனைவியை வீட்டில் விட்டு மலேஷியாவிற்கு வேல்முருகன் வேலைக்கு

திருச்சி-மலேஷியாவில் வேலைக்கு சென்றவர் நான்கு ஆண்டுகளுக்கு பின் ஊர் திரும்புகையில், விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 36. இவரது மனைவி நிஷா, 25. திருமணம் ஆகி, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணம் ஆகி, இரண்டு மாதத்தில் மனைவியை வீட்டில் விட்டு மலேஷியாவிற்கு வேல்முருகன் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றிய வேல்முருகன், தான் வேலை பார்க்கும் சலுான் கடை உரிமையாளரிடம் ஊருக்கு செல்ல கேட்டுள்ளார்.போதிய பணம் இல்லாமல் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து தன் குடும்பத்தாருக்கு வேல்முருகன் தகவல் தெரிவிக்க, அவர்கள் இங்கிருந்து அவருடைய விமானத்துக்கான கட்டணத்தை அனுப்பி, புறப்பட்டு வரச் சொல்லி உள்ளனர். நேற்று அதிகாலை மலேஷியாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டார். நடுவானில் விமானம் வரும்போது, வேல்முருகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.

இந்த தகவல் அவரை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில் காத்துஇருந்த மனைவி நிஷா மற்றும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. வேல்முருகன் மனைவி, உறவினர்கள் கதறி அழுதனர். பின், விமானம் வந்ததும், அவரது உடல் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X