பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சியில் ஆண்கள் தலையீடு கண்காணிக்க அரசு திடீர் உத்தரவு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெண்கள் பதவி வகிக்கும் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில், ஆண்கள் தலையீடு உள்ளதா என, பொறுப்பு அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தமிழக உள்ளாட்சியில் பெண்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில், 50 சதவீதத்துக்கு

பெண்கள் பதவி வகிக்கும் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில், ஆண்கள் தலையீடு உள்ளதா என, பொறுப்பு அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக உள்ளாட்சியில் பெண்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில், 50 சதவீதத்துக்கு அதிகமாக பெண்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஊரக வளர்ச்சி, ஊராட்சி இயக்குனர் பிரவீன் பி.நாயர், கலெக்டர்கள், பி.டி.ஓ.,க்களுக்கு அனுப்பிய உத்தரவு:ஊரக உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு, கிராம ஊராட்சி தலைவர்களின் பொறுப்பு, கடமை, கூட்டம் நடத்தல், கணக்கு, ரொக்க புத்தகம் பராமரித்தல், மத்திய -- மாநில அரசு திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. உள்ளாட்சியில் பதவிஏற்றுள்ள பெண்களின் கணவர், தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆண்கள், நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வதாக புகார் உள்ளது.

பெண் பிரதிநிதிகளின் உறவினர்கள், நிர்வாகத்தில் தலையிடுகிறார்களா என்பதை கண்காணிக்க, பொறுப்பு அலுவலர்கள் நியமிக்க வேண்டும். ஊராட்சியை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், வட்டார ஊராட்சியை, பி.டி.ஓ.,வும், மாவட்ட ஊராட்சியை மாவட்ட ஊராட்சி செயலரும் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்

- நமது நிருபர்-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X