பொது செய்தி

தமிழ்நாடு

சதம் அடித்து, 'வனத்துக்குள் திருப்பூர் - 7' வெற்றி நடை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -7 ' திட்டத்தின், 100 வது நிகழ்ச்சியில், பரஞ்சேர்வழி கிராமத்தில், வன்னிமரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், ஒவ்வொரு கட்டத்திலும், பணியாளரின் அனுபவங்கள் மூலமாக, புதிய தொழில்நுட்பத்தால் புதிய வளர்ச்சி பெறுகிறது. ஏழாவது திட்டம் துவங்கிய நாளில் இருந்தே, பழவகை மற்றும் அரியவகை நாட்டு மரங்கள்
 சதம் அடித்து, 'வனத்துக்குள் திருப்பூர் - 7' வெற்றி நடை

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -7 ' திட்டத்தின், 100 வது நிகழ்ச்சியில், பரஞ்சேர்வழி கிராமத்தில், வன்னிமரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், ஒவ்வொரு கட்டத்திலும், பணியாளரின் அனுபவங்கள் மூலமாக, புதிய தொழில்நுட்பத்தால் புதிய வளர்ச்சி பெறுகிறது. ஏழாவது திட்டம் துவங்கிய நாளில் இருந்தே, பழவகை மற்றும் அரியவகை நாட்டு மரங்கள் நடப்படுகின்றன.திட்டக்குழுவினரின் சிறப்பான கட்டமைப்பாலும், நேர்த்தியான திட்டமிடலாலும், மரக்கன்றுகள், 100 சதவீதம் மரங்களாக வளர்ச்சி பெற்று வருகின்றன. இத்திட்டத்தில், தரிசு நிலங்கள் பசுமை மரக்காடுகளாக மாறியுள்ளன.ஏழாவது திட்டத்தின், 100வது நிகழ்ச்சி, பரஞ்சேர்வழி கிராமத்தில் நடந்தது. காங்கயம், பரஞ்சேர்வழி சங்காடு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், அரிய வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.டாக்டர்கள் சுப்பிரமணி, சத்யா ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் மரக்கன்றுகள் நடவு நடந்தது. வன்னிமரம் - 70, புங்கன் -30, வேம்பு -50, வாகை -50, நாவல் -70, நீர்மருது- 20, பூவரசு -30 நாற்றுக்கள் நடவு செய்யும் பணி துவங்கியுள்ளது.'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X