சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை உயர்மட்ட பாலம் இடிந்து தொழிலாளி பலி: விபத்து நடந்தது எப்படி?

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
மதுரை-மதுரை - நத்தம் சாலையில் கட்டப்படும் உயர்மட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து, கட்டு மான பணியில் ஈடுபட்டிருந்த உ.பி., மாநில தொழிலாளி பலியானார்.மதுரை - நத்தம் இடையேயான துாரம், 32 கி.மீ., இதில் அவுட்போஸ்டில் இருந்து ஊமச்சிக்குளம் செட்டிக்குளம் வரை, 7.2 கி.மீ., துாரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, 2018 நவம்பரில் துவங்கியது. இப்பணியை, 670 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலை

மதுரை-மதுரை - நத்தம் சாலையில் கட்டப்படும் உயர்மட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து, கட்டு மான பணியில் ஈடுபட்டிருந்த உ.பி., மாநில தொழிலாளி பலியானார்.latest tamil news


மதுரை - நத்தம் இடையேயான துாரம், 32 கி.மீ., இதில் அவுட்போஸ்டில் இருந்து ஊமச்சிக்குளம் செட்டிக்குளம் வரை, 7.2 கி.மீ., துாரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, 2018 நவம்பரில் துவங்கியது. இப்பணியை, 670 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறது. தற்போது திருப்பாலை, பாங்க் காலனி யில் சர்வீஸ் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.

நேற்று மாலை 5:15 மணிக்கு பாங்க் காலனிக்கும், நாகனாகுளத்திற்கும் இடையே சர்வீஸ் பாலத்தின் கட்டுமான பணி நடந்த போது, கான்கிரீட் துாண், 70 அடி உயரத்தில் இருந்து இடிந்து விழுந்ததில், உ.பி., தொழிலாளி ஆகாஷ் சிங், 26, என்பவர் பலியானார்.

மீட்பு பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சம்பவ இடத்தை நிதி அமைச்சர் தியாகராஜன், எம்.பி., வெங்கடேசன், கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். கலெக்டர் அனீஷ் சேகர் கூறுகையில், ''பணியின் போது ஏற்பட்ட தவறால் விபத்து நடந்துள்ளது. ஒரு தொழிலாளி இறந்துள்ளார். வேறு யாருக்கும் காயமில்லை. பாலத்தின் மற்ற பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.


latest tamil news


அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: சர்வீஸ் பாலத்தின் கான்கிரீட் துாண் ஒன்றை சரியாக பொருத்த, 'ஹைட்ராலிக் குழாய்' மூலம் பணி நடந்தது. அப்போது, குழாய் வெடித்து துாண் விழுந்தது.இப்பகுதியில் இருவர் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளனர். இது, இருவர் மட்டுமே செய்யக்கூடிய பணி தானா. கலெக்டர் உத்தரவுபடி கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளது. நகாய் அதிகாரிகள் ஆலோசித்து, ஆய்வு செய்து மீண்டும் பணியை துவங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.Pillai - CHENNAI,இந்தியா
29-ஆக-202116:54:54 IST Report Abuse
M.P.Pillai It is an accident. Due to the failure of the Hydraulic tem, the beam has slipped. It is required to identify the fault, rectify and carry out a safety audit and proceed. Please ensure the fallen beam is not reused, as due to falling with weight from a distance, cracks would have developed which may weaken the bridge later on usage. Police/revenue officials may proceed with the case as human life is lost.
Rate this:
Cancel
29-ஆக-202116:31:27 IST Report Abuse
மதுமிதா முறை கேட்டின் முன்னோடிகள். இது பொது மக்களுக்கு மட்டுமல்ல அரசியல் குடும்பத்தினருக்கும் ஆபத்து என்று உணராதவர்கள்
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
29-ஆக-202114:57:27 IST Report Abuse
Nesan மக்கள் உண்ணும் உணவில் கலப்படம், மருந்தில் கலப்படம், கட்டுமான பணிகளில் கலப்படம்.... இதற்க்கு நேர்மையற்ற, மனசாட்சி அற்ற அரசியல் வாதிகள் தான் முழுக்க, முழுக்க காரணம். வான் உயர்ந்த கட்டிடங்களில், தமிழகத்தில் குடிபெயர்ந்து வாழ்வது, தெரிந்து தன தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதற்கு சமம். அரசு காட்டும் கட்டுமான பணிகள் எப்ப இடிந்துவிலும் என்பேதே சொல்லமுடியாத நிலையில் உள்ளது. இந்த நம்பிக்கைத்துரோகிகளை நேர்மையான அரசும், தெய்வமும் தான் தண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X