வேலை வாங்கித்தருவதாக பண மோசடி: 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை வாங்கித்தருவதாக பண மோசடி: 3 பேர் கைது

Added : ஆக 29, 2021
Share
துாத்துக்குடி-துாத்துக்குடி, புதுக்கிராமத்தில் கிங்ஸ்டார் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை மூன்று பேர் நடத்தினர். அரசு அங்கீகாரம் பெற்ற வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக இணைய தளத்தில் விளம்பரம் செய்தனர். அதற்கு விண்ணப்பித்தோரிடம் ரூ.8 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். ஆனால் யாருக்கும் வேலைவாங்கித்தரவில்லை. இதுகுறித்து முத்தையாபுரத்தை சேர்ந்த ஒரு பெண்

துாத்துக்குடி-துாத்துக்குடி, புதுக்கிராமத்தில் கிங்ஸ்டார் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை மூன்று பேர் நடத்தினர். அரசு அங்கீகாரம் பெற்ற வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக இணைய தளத்தில் விளம்பரம் செய்தனர். அதற்கு விண்ணப்பித்தோரிடம் ரூ.8 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். ஆனால் யாருக்கும் வேலைவாங்கித்தரவில்லை. இதுகுறித்து முத்தையாபுரத்தை சேர்ந்த ஒரு பெண் புகாரின் பேரில் எஸ்.பி., ஜெயக்குமார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் விருதுநகர் மாவட்டம் வி.கரிசல்குளம் மாரிமுத்து 23, மதுரை சுப்பிரமணிய புரம் மணிகண்டன் 24, திருநெல்வேலி மூன்றடைப்பு கிறிஸ்டியன்சுதாகர் 23, ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X