பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மூணாறு-கேரளா மூணாறில் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த வாரத்தை விட நேற்று குறைந்து இருந்தது. கொரோனா ஊரடங்கால் நான்கு மாதங்களாக முடங்கிய சுற்றுலா பகுதிகள் கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வருகை அதிகரித்ததால் களை கட்டின. ஓணம் விடுமுறைக்கு பின் ஆக.24 முதல் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்ததால் சுற்றுலா பகுதிகள் களை இழந்தன. வார விடுமுறையில் பயணிகள் வருகை

மூணாறு-கேரளா மூணாறில் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த வாரத்தை விட நேற்று குறைந்து இருந்தது.

கொரோனா ஊரடங்கால் நான்கு மாதங்களாக முடங்கிய சுற்றுலா பகுதிகள் கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வருகை அதிகரித்ததால் களை கட்டின. ஓணம் விடுமுறைக்கு பின் ஆக.24 முதல் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்ததால் சுற்றுலா பகுதிகள் களை இழந்தன. வார விடுமுறையில் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று வருகை குறைவாக இருந்தது. ஓணம் விடுமுறையில் மாட்டுப்பட்டி அணையில் சராசரியாக 1500 பயணிகள் படகு சவாரி செய்த நிலையில் நேற்று 400ஆக குறைந்தது. மாநிலத்தில் கொரோனா தடுப்புக்காக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் சுற்றுலா பகுதிகள் அனைத்தும் மூடப்படும். அதனால் நேற்று பயணிகள் வருகை குறைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X