பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று இடங்களில் செக்கிங், 30 இடங்களில் ஓப்பன்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
நாகர்கோவில்-குமரி -கேரள எல்லையில் 30 இடங்களில் திறந்து விட்டு மூன்று இடங்களில் மட்டுமே செக்கிங் நடப்பதால், கேரளாவில் தாண்டவம் ஆடும் கொரோன குமரி மாவட்டத்திலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கேரளாவில் கொரோனாவை கட்டப்படுத்த முடியாமல் அம்மாநில கம்யூனிஸ்ட் அரசு திணறுகிறது. ஓணத்துக்கு முன்னர் தினசரி பாதிப்பு 22 ஆயிரமாக இருந்தது. தற்போது அது 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது

நாகர்கோவில்-குமரி -கேரள எல்லையில் 30 இடங்களில் திறந்து விட்டு மூன்று இடங்களில் மட்டுமே செக்கிங் நடப்பதால், கேரளாவில் தாண்டவம் ஆடும் கொரோன குமரி மாவட்டத்திலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனாவை கட்டப்படுத்த முடியாமல் அம்மாநில கம்யூனிஸ்ட் அரசு திணறுகிறது. ஓணத்துக்கு முன்னர் தினசரி பாதிப்பு 22 ஆயிரமாக இருந்தது. தற்போது அது 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரித்து தினசரி பாதிப்பு 45 ஆயிரத்தை எட்டக்கூடும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டது என்று எதிர்கட்சிகளான காங்., பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளன.கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் ஒன்றான குமரி மாவட்டத்தின் எல்லையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலையிலும் அதிகாரிகளின் அலட்சியம் தொடர்கிறது. கேரளாவில் இருந்து குமரியில் நுழைய 10 முக்கிய ரோடுகளும், 23 சிறுசிறு ரோடுகளும் உள்ளன. முக்கிய ரோடுகளில் களியக்காவிளை, காக்கவிளை, சூழால் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர்., மற்றும் இரண்டு தடுப்பூசி சான்றிதழ்கள் பரிசோதிக்கப்படுகிறது.நெட்டா, கோழிவிளை, புலியூர்சாலை, பளுகல், காரக்கோணம், கண்ணுமாமூடு, கண்ணநாகம் ஆகிய ஏழு முக்கிய செக்போஸ்டுகளில் சோதனை இல்லை. மேலும் கேரளாவில் இருந்து வரும் 23 சிறு சிறு ரோடுககள் குமரி மாவட்ட ரோடுகளில் இணைகின்றன.

இங்கும் எந்த சோதனையும் இல்லை.சுற்றுலாவுக்காக கேரள மக்கள் பெரிய அளவில் வரவில்லை. எனினும் வியாபரத்துக்காகவும், உறவினர்களை பார்க்கவும் அதிக அளவில் வருகின்றனர். இவர்களை சரியாக கண்காணிக்காத பட்சத்தில் குமரியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. மேலும் பல்வேறு பணிகளுக்காக குறிப்பாக கட்டட பணிகளுக்காக காலை நேரத்தில் கேரளா செல்லும் ரயில்களில் ஏராளமான தொழிலாளர்கள் திருவனந்தபுரம், கொல்லம் சென்று விட்டு அன்று இரவே திரும்புகின்றனர். இவர்களுக்கும் எந்த பரிசோதனையும், கட்டுப்பாடுகளும் இல்லை.இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அச்சம் நீடிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X