கேரளாவில் உயரும் கொரோனா ஒரேநாளில் 31,265 பேர் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் உயரும் கொரோனா ஒரேநாளில் 31,265 பேர் பாதிப்பு

Added : ஆக 29, 2021
Share
மூணாறு--கேரளாவில் கொரோனாவால் நேற்று 31,265 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தையும், கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 5 லட்சத்தையும் கடந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,67,497 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 31,265 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 18.67 சதவீதமாக இருந்தது. மாவட்ட வாரியாக திருச்சூரில் 3957, எர்ணாகுளம் 3807, கோழிகோடு

மூணாறு--கேரளாவில் கொரோனாவால் நேற்று 31,265 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தையும், கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 5 லட்சத்தையும் கடந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,67,497 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 31,265 பேருக்கு கொரோனா உறுதியானது.

நோய் பாதிப்பு 18.67 சதவீதமாக இருந்தது. மாவட்ட வாரியாக திருச்சூரில் 3957, எர்ணாகுளம் 3807, கோழிகோடு 3292, மலப்புரம் 3199, கொல்லம் 2751, பாலக்காடு 2488, திருவனந்தபுரம் 2360, ஆலப்புழா 1943, கோட்டயம் 1680, கண்ணூர் 1643, பத்தனம்திட்டா 1229, வயநாடு 1224, இடுக்கி 1171, காசர்கோடு 521 பேர் பாதிக்கப்பட்டனர்.நேற்று 21,468 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

கடந்த சில நாட்களில் கொரோனாவால் 153 பேர் இறந்ததால் மொத்த பலி 20,466 ஆக அதிகரித்தது.2021 பிப்.28ல் மருத்துவமனை சிகிச்சையில் 50,514 பேரும், தனிமை கண்காணிப்பில் 2,13,247 பேரும் இருந்தனர். இது நேற்றைய நிலவரப்படி முறையே 2,04,896, 5,14,031 என அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.----------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X