415 கிலோ வெள்ளி கொலுசுகள் திண்டுக்கல் அருகே சிக்கியது| Dinamalar

415 கிலோ வெள்ளி கொலுசுகள் திண்டுக்கல் அருகே சிக்கியது

Added : ஆக 29, 2021
Share
கொடைரோடு--வரி செலுத்தாமல் சேலத்தில் இருந்து மதுரைக்கு கொண்டு வந்த 415 கிலோ வெள்ளி கொலுசுகளை திண்டுக்கல் அருகே கொடைரோட்டில் பிடித்த வணிக வரித்துறை அதிகாரிகள் ரூ.16.93 லட்சம் அபராதம் விதித்தனர்.சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து மதுரை நகை கடைகளுக்கு வெள்ளி பொருட்கள் கொண்டு வருவது வழக்கம். முறையாக ஜி.எஸ்.டி., வரி செலுத்தாமல் 6 வாகனங்களில் வெள்ளி கொலுசுகள் கொண்டு வருவதாக மதுரை

கொடைரோடு--வரி செலுத்தாமல் சேலத்தில் இருந்து மதுரைக்கு கொண்டு வந்த 415 கிலோ வெள்ளி கொலுசுகளை திண்டுக்கல் அருகே கொடைரோட்டில் பிடித்த வணிக வரித்துறை அதிகாரிகள் ரூ.16.93 லட்சம் அபராதம் விதித்தனர்.

சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து மதுரை நகை கடைகளுக்கு வெள்ளி பொருட்கள் கொண்டு வருவது வழக்கம். முறையாக ஜி.எஸ்.டி., வரி செலுத்தாமல் 6 வாகனங்களில் வெள்ளி கொலுசுகள் கொண்டு வருவதாக மதுரை மண்டல வணிக வரித்துறை இணை ஆணையர் இந்திராவுக்கு நேற்று தகவல் கிடைத்தது.அவரது உத்தரவில் வணிகவரி அலுவலர் பாலமுருகன், பசல் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் அம்மையநாயக்கனுார் போலீசார் உதவியுடன் வாகன சோதனை நடத்தினர்

.வரி செலுத்தாமல் ஆறு கார்களில் 415 கிலோ வெள்ளி கொலுசுகள் கொண்டு வந்தது தெரிந்தது. அபராதமாக ரூ.16.93 லட்சம் செலுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர். சம்பவ இடத்திலேயே அபராதம் செலுத்தியதால் வெள்ளி கொலுசுகள் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X