சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மீது மிளகாய் பொடி துாவி சிறுமியை கடத்திய 5 பேர் கைது

Added : ஆக 29, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை-நிலக்கோட்டை அருகே தாய் மீது மிளகாய் பொடி துாவி சிறுமியை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கடத்தியது திருமணம் செய்தவர் எனத் தெரிந்ததால் அவர் மீது 'போக்சோ' சட்டம் பாய்ந்தது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டியில் 15 வயது சிறுமி தாயுடன் வீட்டில் இருந்தார். மாலைவேளையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் வந்த

நிலக்கோட்டை-நிலக்கோட்டை அருகே தாய் மீது மிளகாய் பொடி துாவி சிறுமியை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கடத்தியது

திருமணம் செய்தவர் எனத் தெரிந்ததால் அவர் மீது 'போக்சோ' சட்டம் பாய்ந்தது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டியில் 15 வயது சிறுமி தாயுடன் வீட்டில் இருந்தார். மாலைவேளையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் வந்த கும்பல் தாய் மீது மிளகாய் பொடியை துாவி சிறுமியை கடத்திச் சென்றது.எஸ்.பி., ஸ்ரீனிவாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலக்கோட்டை டி.எஸ்.பி., முருகன், அம்மையநாயக்கனுார், வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கடத்தல் கும்பலை பிடிக்க எஸ்.பி., உத்தரவிட்டார்.சிக்கியது கடத்தல் கும்பல்விளாம்பட்டி போலீசார் கடத்தியவர்களை துரத்திச் சென்றனர். இரவு முழுவதும் பள்ளபட்டி, கொடைரோடு சுங்கச்சாவடி, காமலாபுரம், சின்னாளபட்டி, கலிக்கம்பட்டி என போக்குக் காட்டினர் கடத்தல்காரர்கள். ஒருவழியாக பஞ்சம்பட்டி ஊராட்சி பிள்ளையார்நத்தத்தில் போலீசார் அவர்களை மடக்கினர்.தாயிடம் சிறுமியை ஒப்படைக்க சென்ற போதுதான் தெரிந்தது சிறுமியைக் கடத்தியவர், அவரை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்த விளாம்பட்டி முத்துப்பாண்டி 29, என்பது. இதனால் முத்துப்பாண்டி மீது 'போக்சோ' சட்டம் பாய்ந்தது. துணை போன துரைப்பாண்டி 37, ராஜன் 29, காசி 23, ராஜா 40, ஆகியோர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X