சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மசாஜ்' சென்டரில் விபசாரம் பா.ம.க., நிர்வாகி தலைமறைவு

Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை-'மசாஜ்' சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த பா.ம.க., நிர்வாகி, தலைமறைவானார். ஒரு பெண் ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரை காமராஜர் ரோட்டில் 'ப்ளூமிங் டே ஸ்பா' என்ற பெயரில் 'மசாஜ்' சென்டர் இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு விபசாரம் நடப்பதாக ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலாவுக்கு தகவல் கிடைத்தது. போலீசார்

மதுரை-'மசாஜ்' சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த பா.ம.க., நிர்வாகி, தலைமறைவானார்.

ஒரு பெண் ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரை காமராஜர் ரோட்டில் 'ப்ளூமிங் டே ஸ்பா' என்ற பெயரில் 'மசாஜ்' சென்டர் இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு விபசாரம் நடப்பதாக ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலாவுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வாடிக்கையாளர் போல் சென்று ஆய்வு செய்து உறுதி செய்தனர்.

அங்கிருந்த மேற்கு வங்காளம், கர்நாடகாவைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட ஐந்து பெண்களை மீட்டனர். மசாஜ் சென்டர் ஊழியர்கள் மதுரை மேலமாசிவீதி சதீஷ், 35 அம்மன் தெரு ஷாலினி, 24 ஆகியோரை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது: மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பா.ம.க., நிர்வாகி, அவரது நண்பர் மனித உரிமை அமைப்பு ஒன்றின் தலைவர் ஆகியோர் இரண்டு ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வந்துள்ளனர். புரோக்கர்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை வரவழைத்து, மசாஜ் பயிற்சி பெற்றது போல் போலியாக சான்று பெற்று வேலைக்கு சேர்த்துள்ளனர்.

மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் தந்துள்ளனர். புரோக்கர் மூலம் வாடிக்கையாளர் வந்தால் அவருக்கு கமிஷன் தந்துள்ளனர். 'ஸ்பா'வுக்கென இருக்கும் அலைபேசி 'ஆப்'பில் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களை நேரில் வரச் செய்து கட்டண விபரங்களை தெரிவிக்கின்றனர். மசாஜ் செய்யும் பெண்கள் மூலம் 'விரும்பினால் செக்சில் ஈடுபடலாம்' என கூறச் செய்து விபசாரம் செய்துள்ளனர். அதற்கு 'டிப்ஸ்' என்ற பெயரில் தனி கட்டணம் வசூலித்துள்ளனர். பா.ம.க., நிர்வாகி உட்பட நான்கு பேரை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கோவை வாலிபர் கொலை?தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் லாட்ஜ் உள்ளது.

இங்கு கடந்த 22ம் தேதி முதல் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் லெனட் பிராங்ளின், 39 அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். நேற்று அவர், அறையில் மர்மமான முறையில், மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். லாட்ஜ் ஊழியர்கள் மருத்துவக் கல்லுாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்த போது, லெனட் பிராங்ளின் தலையில் இரும்பு கம்பியால், அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டதற்கான தடயம் இருந்துள்ளது.

அறையில் சிக்கிய டைரியில், பல பெண்களின் விபரங்கள், அவர்களுக்கான தொகை, எப்போது அவர்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் போன்ற தகவல்கள் இருந்துள்ளன. மேலும், தஞ்சாவூரில் பாலியல் தொழில் நடத்தி போலீசில் சிக்கிய கும்பலைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் 'பைக்'கை லெனட் பிராங்ளின் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் செந்தில்குமார் கும்பலுக்கும், லெனட் பிராங்ளினுக்கும் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-ஆக-202116:32:16 IST Report Abuse
Mani . V "மரம் வெட்டி எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து இதற்கு முட்டுக் கொடுத்து பேசும்படி விழாக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X