புதுவை டாக்டரிடம் மோசடி செய்தவருக்கு வலை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி டாக்டரிடம் 1.30 கோடி மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, குண்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரத்னா தனவேந்தன், 32. தனியார் மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக பணிபுரிகிறார். இவருக்கு லாஸ்பேட்டையைச் சேர்ந்த அருள்பிரகாஷ், 42 என்பவரின் அறிமுகம் கிடைத்தது.அப்போது, அருள்பிரகாஷ், ''நான் தொழிலதிபராக உள்ளேன். ''இயற்கை வேளாண் பண்ணை,

புதுச்சேரி-புதுச்சேரி டாக்டரிடம் 1.30 கோடி மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, குண்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரத்னா தனவேந்தன், 32. தனியார் மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக பணிபுரிகிறார். இவருக்கு லாஸ்பேட்டையைச் சேர்ந்த அருள்பிரகாஷ், 42 என்பவரின் அறிமுகம் கிடைத்தது.அப்போது, அருள்பிரகாஷ், ''நான் தொழிலதிபராக உள்ளேன். ''இயற்கை வேளாண் பண்ணை, வேளாண் உபகரணங்கள் தொழிலில் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்,'' என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.இதையடுத்து டாக்டர் ரத்னா தனவேந்தன் 37.50 லட்சம் ரூபாயை அருள்பிரகாஷிடம் கொடுத்தார்.தொடர்ந்து 1.30 கோடி ரூபாய் வரை கொடுத்தார். அதற்கான ஒப்பந்த நகலை, ரத்னா தனவேந்தன் பெற்றுக் கொண்டார். ஒப்பந்த நகல்களை சோதனை செய்தார். அதில், போலி என தெரிந்தது.பணத்தை திருப்பித் தருமாறு, கேட்டும் அருள்பிரகாஷிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நேற்று முன்தினம் டாக்டர் ரத்னா தனவேந்தன் தன்வந்திரி நகர் போலீசில் புகார் அளித்தார். அருள்பிரகாஷ் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர். அருள்பிரகாஷை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X