பொது செய்தி

இந்தியா

விவசாயிகளுக்கு சலுகைகள் குறைப்பு நாராயணசாமி குற்றச்சாட்டு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காங்., ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், என்.ஆர்.காங்., - பா.ஜ. கூட்டணி ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இந்திய கம்யூ., சார்பில் நடந்த மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டது.

புதுச்சேரி : காங்., ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், என்.ஆர்.காங்., - பா.ஜ. கூட்டணி ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூ., சார்பில் நடந்த மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை.பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகிறார். ரூ.2,500 கோடி மூலதனம் கொண்ட புதுச்சேரி மின்துறையை, அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கிட மத்திய அரசு முயற்சிக்கிறது.மத்திய அரசுக்கு பல வழிகளில் வருவாய் வந்த போதும், பெட்ரோல் மீதான வரியை குறைக்காமல், மாநில அரசு மீது திணிக்கிறது.

புதுச்சேரியில் கடந்தாண்டு ரூ.100 கோடியை கூடுதல் மானியமாக பெற்றோம். தற்போது ரூ.247 கோடிதான் முதல்வர் அதிகமாக வாங்கியுள்ளார்.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ரூ.9 ஆயிரம் கோடி கடன் ரத்து, மில்கள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் கொடுத்தார். ஆனால், அதுபற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. நாங்கள் விவசாயிகளுக்கு வழங்கிய சலுகைகள், இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் ஆண்டிற்கு ரூ.1,600 கோடி ஜி.எஸ்.டி., இழப்பீடு பெற்றோம். வரும் ஜூன் முதல் அதுவும் வராது. இதனால், பட்ஜெட் ரூ.7,000 கோடியாக குறைந்துவிடும். இவற்றையெல்லாம், முதல்வர் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X