கிரைம் செய்திகள்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மனைவி மாயம்: கணவன் புகார்புவனகிரி: புவனகிரி பூ.மணவெளி பாட்டைத்தெரு செல்வக்குமார் மனைவி பரமேஸ்வரி,38; இரு மகன்கள் உள்ளனர். கடந்த 19 ம் தேதியில் இருந்து காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.பிராந்தி விற்ற பெண் மீது வழக்குபுவனகிரி: புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி,

மனைவி மாயம்: கணவன் புகார்
புவனகிரி: புவனகிரி பூ.மணவெளி பாட்டைத்தெரு செல்வக்குமார் மனைவி பரமேஸ்வரி,38; இரு மகன்கள் உள்ளனர். கடந்த 19 ம் தேதியில் இருந்து காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

பிராந்தி விற்ற பெண் மீது வழக்கு
புவனகிரி: புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கீரப்பாளையம் ஆற்றங்கரைத் தெருவில் முத்துகிருஷ்ணன் மனைவி அம்சாயாள்,55; டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து 8 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இந்திய கம்யூ., கட்சியினர் 10 பேர் மீது வழக்கு
புவனகிரி: புவனகிரி அருகே குறியாமங்கலத்தில் உள்ள ஆலமரத்தடியில் இந்திய கம்யூ., நகர செயலாளர் ராஜேந்திரன்,58; தலைமையில் 10க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்தும், இந்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் மக்கள் நாடாளுமன்றம் நடத்தினர். நகர செயலாளர் ராஜேந்திரன் உட்பட 10 பேர் மீது புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்கு பதிந்தார்.

லாட்டரி சீட்டு விற்றவர் கைது
விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று புதுக்கூரைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற சஞ்சீவ், 34, என்பவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்றவர் கைது
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் ரோந்து, பணியில் ஈடுபட்டனர். மாதாக்கோவில் தெருவில், கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாண்டியனை, 50; கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெண் தற்கொலை
விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி சிவகாமி, 48; வயிற்று வலிக்கு சிகிச்சைபெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர் கடந்த 23ம் தேதி எலி பேஸ்டை சாப்பிட்டார். சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். தம்பதி மீது தாக்கு: 8 பேர் மீது வழக்குவிருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். அதேபகுதியைச் சேர்ந்த பெரியசாமி. இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு பெரியசாமி, அவரது மகன்கள் பாலுசாமி, பிரவீன், மனைவி ராணி மற்றும் ஆதரவாளர்கள் ராஜேந்திரன், பொன்னுசாமி, அரவிந்த், அமராவதி ஆகியோர் சேர்ந்து வேல்முருகன், அவரது மனைவி ஆச்சிகண்ணு ஆகியோரை திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில் பெரியசாமி, பாலுசாமி உட்பட 8 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். வாலிபரை தாக்கிய மூவருக்கு வலைபுதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி, 45; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகேசனுக்கும், முன் விரோதம் உள்ளது. கடந்த 26ம் தேதி, முருகேசன் மற்றும் மணிபாலன், முருகசாமி ஆகியோர் தங்கமணி வீட்டிற்கு சென்று, அவரை, திட்டி தாக்கினர். புகாரின் பேரில், புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப் பதிந்து, முருகேசன், மணிபாலன், முருகசாமி ஆகியோரை தேடி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X