பொது செய்தி

இந்தியா

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் நேற்று மக்கள் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.இந்திய கம்யூ., மாநிலக் குழு சார்பில் நேற்று சுதேசி மில் எதிரில் மக்கள் பாராளு மன்ற கூட்டம் நடந்தது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம், தேசிய கடல் வள மசோதா, மின்சார திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். பாதுகாப்பு துறையை
 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் நேற்று மக்கள் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூ., மாநிலக் குழு சார்பில் நேற்று சுதேசி மில் எதிரில் மக்கள் பாராளு மன்ற கூட்டம் நடந்தது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம், தேசிய கடல் வள மசோதா, மின்சார திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். பாதுகாப்பு துறையை தனியார் மயமாக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

புதுச்சேரி அரசின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இக்கூட்டம் நடந்தது.தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு, விவாதம் நடைபெற்றது.முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூ. மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம் உள்ளிட்டோர் பேசினர்.கூட்டத்தில், டில்லி விவசாயிகள் போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X