பொது செய்தி

தமிழ்நாடு

தங்கப் பத்திரங்கள் விற்பனை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : மத்திய அரசு சார்பில் தங்கப்பத்திரங்கள் விற்பனை நாளை 30ம் தேதி துவங்கி செப்டம்பர் 3ம் தேதி வரை நடக்கிறது.கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசு சார்பில் தங்கப் பத்திரங்கள் விற்பனை நாளை 30 ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கி இத்தங்க பத்திரத்தை வெளியிடுகிறது. இதில் 1 கிராம்

கடலுார் : மத்திய அரசு சார்பில் தங்கப்பத்திரங்கள் விற்பனை நாளை 30ம் தேதி துவங்கி செப்டம்பர் 3ம் தேதி வரை நடக்கிறது.
கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசு சார்பில் தங்கப் பத்திரங்கள் விற்பனை நாளை 30 ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கி இத்தங்க பத்திரத்தை வெளியிடுகிறது. இதில் 1 கிராம் சுத்தத் தங்கத்தின் விலை ரூ. 4732 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தங்கப் பத்திர விற்பனை திட்டத்தில் 2.50 சதவீதம் ஆண்டு வட்டியாக 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்.இத்தங்கப் பத்திரத்தனை முதலீடு செய்த தேதியில் இருந்து 8 ஆண்டு கால முடிவில் முதிர்வு தொகையை இந்திய பணமாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் முதலீடு செய்த தேதியில் இருந்து 5 ஆண்டு முடிய வட்டி பெறும் தேதியிலும் இத்தங்க பத்திரத்தை முன்முதிர்வு செய்து கொள்ளலாம். முதிர்வு தொகையை, முதிர்வு பெறும் தேதியின் முந்தைய வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய தங்க விற்பனையாளர்கள் சங்கத்தால் 999 தர தங்கத்திற்கு நிர்ணயம் செய்த விலையில் இந்திய பணமாக பெற்றுக் கொள்ளலாம். பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X