பொது செய்தி

இந்தியா

ஆசிரியையிடம் செயின் பறிப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருபுவனை : திருபுவனை அருகே நடந்து சென்ற ஆசிரியையிடம் தங்க செயினை பறித்துச்சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருபுவனை பாளையம், தன்ராசு நகர், புதுகோயில் வீதியில் வசிப்பவர் அமுதா,59; அதே பகுதியை சேர்ந்தவர் லாவண்யா, 28.இருவரும் திருபுவனை மெயின் ரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர். அருகில் உள்ள பள்ளிக்கு இருவரும் நடந்தே

திருபுவனை : திருபுவனை அருகே நடந்து சென்ற ஆசிரியையிடம் தங்க செயினை பறித்துச்சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருபுவனை பாளையம், தன்ராசு நகர், புதுகோயில் வீதியில் வசிப்பவர் அமுதா,59; அதே பகுதியை சேர்ந்தவர் லாவண்யா, 28.இருவரும் திருபுவனை மெயின் ரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர்.

அருகில் உள்ள பள்ளிக்கு இருவரும் நடந்தே சென்று வருவது வழக்கம்.கடந்த 26ம் தேதி மாலை 4.00 மணிக்கு பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களில் ஒருவர் லாவண்யா கழுத்திலிருந்த தங்க செயினை பறிக்க முயன்றார். சுதாரித்த லாவண்யா, தனது கைப்பையால் அந்த வாலிபரின் முகத்தில் தாக்கினார்.

இதையடுத்து அமுதா கழுத்திலிருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து, வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X