பொது செய்தி

இந்தியா

சூறைக்காற்றுடன் கனமழை: வாழை மரங்கள் சேதம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருக்கனுார் : செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 50 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தன.ஃதிருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில்,
 சூறைக்காற்றுடன் கனமழை: வாழை மரங்கள் சேதம்

திருக்கனுார் : செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 50 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தன.ஃ

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.இதில், வாழை தார்கள் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி சுப்பராயன் கூறுகையில், 'எனது நிலத்தில், நெல், கரும்பு பயிரிட்டு வந்தேன். காட்டுப் பன்றிகள் தொல்லையால், தற்போது வாழை பயிரிட்டு இருந்தேன். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள், சூறாவளி காற்றால் சேதம் அடைந்து விட்டன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சூறைகாற்றால் சேதமடைந் துள்ள பயிர்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொண்டும்' என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X